சேலத்தில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டு தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது என்று திருமாவளவன் கூறினார்.
டோனியின் மகள் 3 வயதான ஸிவா, ‘பிறந்த நாள் வாழ்த்துகள் அப்பா’ என்ற பாடலை பாடி ‘அப்பா… உங்களுக்கு வயதாகி வருகிறது’ என்ற வரியுடன் முடித்தது அனைவரையும் கவர்ந்தது.
உலகக் கோப்பை கால்பந்து தொடரின் நான்காவது காலிறுதி ஆட்டத்தில் பெனால்டி ஷூட் முறையில் ரஷியாவை 4-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய குரோஷியா அரையிறுதிக்குள் நுழைந்தது.
கேரளாவில் நிபா வைரஸை விரைவில் கட்டுப்படுத்த சிறப்பான நடவடிக்கை எடுத்ததற்காக அமெரிக்காவின் பால்டிமோர் வைராலஜி இன்ஸ்டிடியூட் அம்மாநில முதல்வர் பினராயி விஜயனை கவுரவித்துள்ளது.
அரசு பள்ளிகளுக்கு முட்டை விநியோகம் செய்ததில் முறைகேடு என புகார் எழுந்துள்ளதால், முட்டை சப்ளை செய்யும் கிறிஸ்டி நிறுவனத்தில் நான்காவது நாளாக வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது.
சென்னை மெட்ரோ ரெயில் சேவையில் 3, 4 மற்றும் 5-வது வழித்தடங்கள் அமைக்க 86 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த 800 பேருக்கு நோட்டீஸ் வழங்கும் பணியில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டு உள்ளது.
வீடுகளை உடைத்து சொத்துக்களை திருடுதல் மற்றும் பாதையில் நிறுத்தப்பட்டிருக்கின்ற மோட்டார் சைக்கிள்களை திருடுதல் சம்பந்தமாக 06 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.