சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை மறு நாள் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானக் கடைகள் மற்றும் மது கூடங்கள் மூடப்பட வேண்டும் என்று கலெக்டர் ரோகிணி உத்தரவிட்டுள்ளார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று மாலை அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷன் தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார்.
வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு கடந்த 11-ந்தேதியில் இருந்து ராட்சத குழாய்கள் மூலம் குடிநீர் அனுப்பப்பட்டு வருகிறது. இன்று 65 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
இரத்தினபுரி, மாரப்பன பகுதியில இரத்தினக்கற்கள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இரத்தினபுரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அச்சுவேலி வடக்குப் பகுதியில், நேற்றுமுன்தினம்(12) இரவு, தனியார் பஸ் ஒன்று, வாள்வெட்டுக் குழுவினரால் அடித்துச் சேதமாக்கப்பட்டுள்ளதுடன், தீ மூட்டி எரிக்கவும் முயற்சிக்கப்பட்டுள்ளது.