தவறான தகவல்களை வெளியிட்டு பங்கு சந்தையில் குழப்பம் ஏற்படுத்தியதற்காக டெஸ்லா நிறுவனத்திற்கு ரூ.290 கோடி அபராதம் விதித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் மதுரையில் எய்ம்ஸ் அமைவது குறித்த விவரம் கேட்கப்பட்ட நிலையில், மதுரையில் எய்ம்ஸ் அமைய மத்திய அமைச்சரவை இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கடந்த 8 மாதத்தில் 1890 பேர் வீதி விபத்துக்களில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கையில் 570 பேர் பாதசாரிகளாகவும் 638 பேர் மோட்டார் சைக்கிளில் சென்றவர்களாகவுமே உள்ளனர்.
வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டிருந்த முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ நாடு திரும்பியதுடன் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை தயார் செய்யும் பணியை ஆரம்பித்துள்ளார்.
ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தொடரில் பங்கேற்க அமெரிக்கா சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று நாடு திரும்பியுள்ள நிலையில், அரசியலில் பல அதிரடி முடிவுகளை எடுக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.