ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டமை தொடர்பில் பல்வேறு வாத, பிரதிவாதங்கள் முன்வைக்கப்பட்டுவரும் நிலையில் நாட்டின் அரசியலமைப்பு விவகாரங்கள் தொடர்பிலான மீயுயர் அதிகாரம் உயர்நீதிமன்றத்திடமே உள்ளது என்பதை அனைவருக்கும் நினைவுபடுத்த விரும்புவதாக ட்ரான்ஸ்பெரன்ஸி இன்டர்நெஷனல் தெரிவித்துள்ளது.
மைத்திரி – மஹிந்த கூட்டிணைந்து அமைத்துவரும் சட்டவிரோத ஊழல் ஆட்சியை விட்டு , கூடிய சீக்கரம் வீடு திரும்ப வேண்டி நிலை ஏற்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொது செயலாளர் அகில விராஜ்காரியவசம் தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பிற்கு முரணான, சர்வாதிகார ஆட்சியை எந்த சந்தர்ப்பத்திலும் அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்த ரணில் விக்ரமசிங்க, நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைக்கு பாராளுமன்றத்திலேயே தீர்வு உள்ளதாகவும், அதனால் பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறும் சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுத்தார்.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பிலிருந்து நாங்கள் வெளியேறிவிட்டோம் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளருமான சிவசக்தி ஆனந்தன் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ராஜபக்சே பிரதமராகி இருப்பது ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்ல இந்திய அரசுக்கே ஆபத்தானது. இதன் மூலம் இந்தியா – இலங்கை வெளியுறவுக் கொள்கையில் பெரும் பின்னடைவு
“சமூகத்தில் ஒரு மாற்றம் கொண்டுவர நினைக்கிறப்போ, அதை குடும்பத்திலிருந்துதானே ஆரம்பிக்கணும். அதனால், என் கல்யாணத்தை முடிஞ்ச வரை பூமியை நோகடிக்காம பண்ண நினைச்சேன். ‘ஜீரோ வேஸ்ட்’ என்பதுதான் கல்யாணத்தின் திட்டம்.”