தெலுங்கானா மாநில கவர்னராக டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வருகிற 8-ந்தேதி பதவி ஏற்கிறார். அவருக்கு அம்மாநில ஐகோர்ட்டு தலைமை நீதிபதி பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஆராயும் பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு ஜனாதிபதியிடம் வாக்குமூலம் பெற இந்த வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்க முயற்சிகளை எடுப்பதுடன், ஜனாதிபதி செயலகத்தில் இந்த விசாரணைகளை நடத்தவும் தீர்மானம் எடுத்துள்ளதாக தெரிவுக்குழு மூலமாக தெரிய வருகின்றது. கடந்த ஏப்ரல்…
திடீரென மூடப்பட்ட தேயிலைத் தொழிற்சாலையை மீளவும் திறப்பதற்கு மலையக தொழிலாளர் முன்னணியின் பதுளை பிராந்தியம் மேற்கொண்ட உடனடி நடவடிக்கைகளையடுத்து எட்டு மாதங்களுக்கு பின் வெற்றி கிடைத்துள்ளது.
குழந்தையொன்று உயிரிழந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு குருணாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று மருத்துவ நிபுணர் சேகு சியாப்தீன் மொஹமட் ஷாபிக்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரரர் பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடு அளித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் எதிர்வரும் 8 ஆம் காலை 10.00 மணிக்கு அலரிமாளிகையில் தேசிய கல்வியற் கல்லூரி டிப்ளோமா ஆசிரியர் நியமனங்கள் 4,286 பேருக்கு வழங்கப்படவுள்ளன.
பொத்துவில்,அறுகம்பை,பானம ஆகிய பிரதேசங்களில் சேகரிக்கப்படும் திண்மக் கழிவுகள் முறையாகப் பேணப்படாது பொத்துவில் பானம பிரதான வீதி காட்டுப்பகுதிகளில் கொட்டப்படுவதனால் சுற்றாடல் பாதிக்கப்படுவதுடன் அப்பகுதிகளில் உள்ள மிருகங்களும் பறவைகளும் பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் ஆகியவற்றை உண்டு இறக்கின்றன. இதில் அதிகமாக காட்டு யானைகள்…