கடந்த 18.09.2019 ம் திகதி காணாமல் போன சாய்ந்தமருது மாளிகைகாடு மற்றும் காரைதீவு பிரதேசத்தைச் சேர்ந்த மீனவர்களும் இயந்திரப் படகும் தற்போது திருகோணமலையிலிருந்து 154 கிலோ மீட்டர் தூரத்தில் இந்தியக் கடல் எல்லையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவர்களின் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பினூடாக தமிழ் மக்களின் ஆதரவை பெற்றுக்கொள்வதில் பொதுஜன பெரமுனவினர் கடும் முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர்.
ரயில் திணைக்கள ஊழியர்கள் தொடர்ந்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில், 30 ரயில்களை இன்று முதல் சேவையில் ஈடுபடுபடுத்தவுள்ளதாக, போக்குவரத்து மற்றும் சிவில் சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக தெரிவித்து கட்டுப்பணம் செலுத்திய சமல் ராஜபக்ஷ மற்றும் குமார வெல்கம ஆகியோர், வேட்பு மனுக்களை இன்று (07) தாக்கல் செய்யவில்லை.