வடமராட்சி கிழக்கில் சட்டத்துக்குப் புறம்பாக மணல் அகழ்வு மற்றும் மணல் கடத்தலைத் தடுக்க 30 பேர் கொண்ட சிறப்பு பொலிஸ் பிரிவு ஒன்று காங்கேசன்துறை பிராந்தியத்துக்குப் பொறுப்பான மூத்த பொலிஸ் அத்தியட்சகர் சேனாதீரவால் நியமிக்கப்பட்டுள்ளது.
ஐ.தே.க வின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல்கள் தொடர்பில் சி.ஐ.டி. எனப்படும் குற்றப் புலனாய்வு பிரிவின் பணிப்பாளருக்கு நீதிமன்றம் வெளிநாடு செல்ல தடை விதித்துள்ளது.
ஜனாதிபதியின் சிம்மாசன உரையில் இனவாத கருத்துக்கள் மறைந்திருந்தன. இனவாதத்தை தூண்டிக்கொண்டு நாட்டை முன்னுக்கு கொண்டுசெல்ல முடியாது. அத்துடன் புதிய அரச தலைவருக்கு வழங்கப்படும் அணிவகுப்பு மரியாதை ஜனாதிபதிக்கு மாத்திரம் உரியதல்ல. அதனை பாதுகாப்பது அனைவரதும் கடமை என ஐக்கிய தேசிய கட்சி…
மேல் மாகாணத்தில் மோட்டார் வாகனங்களுக்காக செலுத்த வேண்டி இருந்த எஞ்சிய பணத்தை செலுத்துவதற்காக வழங்கப்பட்ட சலுகை காலம் மேல் மாகாண ஆளுநரின் உத்தரவிற்கமைய 31.05.2020 திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசனை நேற்று (07) தொலைபேசியில் தொடர்பு கொண்டு தற்போது அந்நாடு எதிர்நோக்கியுள்ள வரலாற்றில் மிகக் கொடிய காட்டுத்தீயினால் ஏற்பட்டுள்ள அழிவுகள் தொடர்பில் தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்தார்.