புனித சிவனொளிபாத மலை யாத்திரையில் ஈடுபடும் போது பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் போத்தல்களை எடுத்து வருவதை தவிர்க்குமாறு மஸ்கெலிய பிரதேசசபை பக்தர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
இலங்கையின் புதிய வீதி வரைபடம் எதிர்வரும் 29 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது. 6 மாத காலத்திற்கு பின்னர் இவ்வாறு புதிய வீதி வரைபடத்தை வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக நில அளவையாளர் திணைக்களத்தின் தலைமை அதிகாரி எஸ்.எச்.பீ.பீ.சங்கக்கார தெரிவித்துள்ளார்.
அண்ணனிடம் உள்ள அதிகாரங்களை தம்பி எடுத்துக் கொள்வதற்காகவே அரசியலமைப்பு திருத்தத்தை மாற்றியமைக்க முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற அஜித் மன்னப்பெரும குற்றஞ்சாட்டினார்.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் வேலைத்திட்டங்கள் அனைத்தும் ஜனநாயக விரோத செயற்பாடாக அமைந்துள்ளதாக இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
மலையகத்திலுள்ள சனத்தொகைக்கு ஏற்ப, வருடமொன்றுக்கு 2,000 மாணவர்கள், பல்கலைக்கழகத்துக்குள் உள்ளீர்க்கப்படல் வேண்டும் என்றுமி அதற்கான முற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் நன்னம்பிக்கை நிதியத்தின் செயலாளர் பேராசிரியர் டி. தனராஜ் தெரிவித்தார்.