தென்னவள்

வயோதிபர், சிறுநீரக நோயாளிகள், விசேட தேவையுடையோருக்கு ரூ.5,000 கொடுப்பனவு

Posted by - April 6, 2020
கொரோனா வைரஸ் தாக்கத்தையடுத்து மிகவும் கவனம் செலுத்த வேண்டியவர்களாக கருதப்படும் வயோதிபர்கள், விசேட தேவையுடையோர், மற்றும் சிறுநீரக நோயாளர்கள் ஆகியோருக்கான 5,000 ரூபா கொடுப்பனவு இன்று 06 ஆம் திகதி வழங்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி நேற்றுத் தெரிவித்தார்.
மேலும்

கொரோனாவை கட்டுப்படுத்த ஆயுர்வேத மருந்தினை கண்டுபிடிக்குமாறு கோரிக்கை !

Posted by - April 6, 2020
ஆயுர்வேத முறைகளுக்கு ஏற்ப கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக மாற்று மருந்தைக் கண்டுபிடிக்குமாறு சுதேச மருத்துவ பயிற்சியாளர்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சு மற்றும் கொவிட் -19 பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தினால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும்

பட்டினிச் சாவுகளை தவிர்க்க முடியாமல் போகலாம்! -அனந்தி எச்சரிக்கை

Posted by - April 6, 2020
இலங்கையில் தற்போதைய நிலைமை தொடருமானால் கொரோனா உயிரிழப்பை விட பல மடங்கு பட்டினிச் சாவுகளை தவிர்க்க முடியாமல் போகலாம் என்று ஈழத்தமிழர் சுயாட்சிக்கழகத்தின் செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
மேலும்

மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளுக்கு நிதியுதவி வழங்கத் தயார் – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு

Posted by - April 6, 2020
கொவிட் – 19 கொரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வளிக்கக்கூடிய வகையிலான புதிய கண்டுபிடிப்புக்களை உருவாக்குவதில் ஆர்வம் காண்பிக்கும் பல்கலைக்கழக மாணவர்களை ஊக்குவிக்குமாறும், அதற்கான நிதியுதவியை வழங்கத்தயாராக இருப்பதாகவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்திருக்கிறது.
மேலும்

தொலைக்காட்சி ஊடாக தமிழ், சிங்கள மொழிகளில் கற்றல் நடவடிக்கை

Posted by - April 6, 2020
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களை சீர்குலைக்காமல் இருப்பது சகலரதும் பொறுப்பாகும் என கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
மேலும்

கப்பலில் இருந்து மீட்கப்பட்ட இலங்கை பணியாளர் பூஸ்ஸ முகாமிற்கு

Posted by - April 6, 2020
MSC மெக்னிஃபிகா கப்பலில் இருந்த இலங்கை பணியாளரை மீட்டு கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக கடற்படை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மேலும்

போபிட்டியவில் 10 பொலிஸார் சுயதனிமைப்படுத்தப்பட்டனர்

Posted by - April 6, 2020
போபிட்டிய பொலிஸாரால் கைதுசெய்யபட்ட இளைஞரொருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், குறித்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 10 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனரென தெரிவிக்கப்படுகின்றது.
மேலும்

நிர்கதியாகியுள்ளவர்களை ஒருவாரத்துக்குள் ஊர்களுக்கு அனுப்ப நடவடிக்கை

Posted by - April 6, 2020
ஊடரங்கு சட்டத்தால் கொழும்பு மாவட்டத்தில் நிர்கதியாகியுள்ள வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்களை அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் என, கொழும்பு மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.
மேலும்

மருத்துவ பரிசோதனைக்கு உட்பட வேண்டும்; தடங்கலாக இருக்கக் கூடாது; ஜி.கே.வாசன்

Posted by - April 6, 2020
மருத்துவ பரிசோதனைக்கு வருகின்றவர்களின் சேவைப்பணியை மதித்து பரிசோதனைக்கு உட்பட வேண்டுமே தவிர தடங்கலாக இருக்கக் கூடாது என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
மேலும்