கடந்த வருடம் டிசம்பர் மாதம் நடைபெற்ற பிரிவெனா பரீட்சை பெறுபேறுகள் தற்பொழுது வெளியாகியுள்ளன. பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபுர்வ இணையத்தள பக்கத்தில் பரீட்சை பெறுபேறுகளை பார்வையிட முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
திருமலை ஊடகவியலாளர்களுக்கான உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டன. கிண்ணியாவில் இயங்கும் ஹஸன் மௌலவி பவுன்டேசன் ஊடாக நேற்று (01) கிண்ணியா ஹஸனாத் சிறுவர் இல்லத்தில் வைத்து வழங்கப்பட்டன. இதில் மூவின ஊடகவியலாளர்களுக்கும் வழங்கப்பட்டன.
முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் உள்ள சுனாமி நினைவாலயத்திற்கு முன்னால் உள்ள வீதி ஓரத்தில் போர் நடைபெற்ற காலத்தில் புதைக்கப்பட்டதாக நம்பப்படும் இடம் ஒன்று இன்று பொலிசாரால் தோண்டப்பட்டுள்ளது.
மட்டுப்படுத்தப்பட்டுள்ள புகையிரத சேவை திங்கள் முதல் வழமைக்கு திரும்பும். அனைத்து பகுதிகளுக்கும் பாதுகாப்பான முறையில் புகையிரத சேவை முன்னெடுக்கப்படும் என புகையிரதத் திணைக்களம் அறிவித்துள்ளது.
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, மாளிகை திடலில் பொது மக்கள் மீது பொலிஸார் நடாத்திய தாக்குதலைக் கண்டிப்பதுடன் பாரபட்சமற்ற விசாரணையை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்மராட்சியில் சட்டவிரோதமான முறையில் இடம்பெற்றுவரும் கசிப்பு உற்பத்தியினை இல்லாதொழிப்பதற்கு தென்மராட்சி இளைஞர்கள் முன்வர வேண்டுமென சாவகச்சேரி பிரதேச சபை தவிசாளர் க.வாமதேவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
கிளிநொச்சி – யூனியன்குளம் பகுதியில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டதில் இரு குடும்பங்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் குழுச்சண்டையாக மாறிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் – வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபைக்கு உட்பட்ட நவாலி பகுதியில் அமைந்துள்ள அமெரிக்கன் சிலோன் மிசன் திருச்சபைக்கு சொந்தமான இடுகாட்டில் சில நினைவுத் தூபிகள் விசமிகளால் சேதமாக்கப்பட்டுள்ளது.