சென்னை உட்பட வெளியூர்களில் இருந்து கடந்த ஒரு வாரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கன்னியாகுமரி மாவட்டம் வந்தனர். இவர்களில் கடந்த 3 நாட்களில் 6 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டு நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள ஐந்து தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்க வைக்கப்பட்டவர்களுக்கான மருத்துவ பரிசோதனைகள் நிறைவு பெற்றுள்ளதாக கிளிநொச்சி பிராந்திய தொற்று நோயியலாளர் வைத்திய அதிகாரி நிமால் அருமைநாதன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் கோப்பாயில் ஊரடங்கு வேளையில் தொடர்ச்சியாக மூன்று வீடுகளில் திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பெண்கள் உட்பட ஐந்து பேர் கோப்பாய் பொலிஸார் மற்றும் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் இணைந்து நேற்று கைது செய்துள்ளனர்.
மாகாண சபைகளுக்கான தேர்தல் நடைபெறாமல் இருக்க காரணம் ஐக்கிய தேசியக் கட்சியும்,தமிழ்த் தேசியக் கூட்டமைப்புமே என குற்றம் சாட்டியுள்ள வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித்தலைவர் சி.தவராசா கூட்டமைப்பினர் தங்களின் முகங்களை கண்ணாடியில் பார்த்துவிட்டு மாகாண சபை தொடர்பில் பேசுங்கள் எனவும்…