அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் கைதுசெய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் அவரை விடுதலைசெய்யக் கோரியும் மன்னாரில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
உலக ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரலின் படியே சீனாவின் பாதுகாப்பு அமைச்சரின் இலங்கைக்கான விஜயம் அமைந்திருந்தாக மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இ.சந்திரசேகரம் தெரிவித்துள்ளார்.
நாராயண் தபால்கரின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால் அவரை டிஸ்சார்ஜ் செய்ய மருத்துவர்கள் ஒத்துக்கொள்ளவில்லை. அப்படி இருந்தும் விடாப்பிடியாக வற்புறுத்தி டிஸ்சார்ஜ் ஆகிவிட்டார்.
கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் நாளை (30) நடைபெறவிருந்த பொத்துவில் – பொலிகண்டி பேரணி தொடர்பான வழக்குக்கு எவ்வித உத்தரவுகளையும் கட்டளைகளையும் மே 18 வரை வழங்க முடியாதென மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குளிரூட்டப்பட்ட அலுவலகங்கள் அல்லது நிறுவனங்களில் கடமைப்புரிபவர்கள் தொடர்ந்து சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றுமாறு, தொற்று நோய் பிரிவின் பிரதான தொற்று நோயியல் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தலுடன் பொதுமக்கள் கொரோனா தடுப்பூசியை அவசியம் எடுத்துக் கொள்ளுமாறும் தொடர்ந்து சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி வருகிறார்கள்.