உலக சுகாதார தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி டெட்ரோஸ் அதானோம் (Tedros Adhanom) க்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையில் இன்று (07) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து சூம் (ZOOM) தொழில்நுட்பத்தின் ஊடாக இடம்பெற்ற கலந்துரையாடலுக்கு பலன் கிட்டியுள்ளது.
மட்டக்களப்பு, வாழைச்சேனை – கொழும்பு பிரதான வீதியின் மியான்குளப் பகுதியில் காரொன்று வேகக்கட்டுப்பாட்டை மீறி வீதியை விட்டு தடம்புரண்டு விபத்திற்கு இலக்காகியுள்ளது.
கோவிட் வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருகின்றதால் முழு நாட்டையும் முடக்க முடியாவிட்டால் குறைந்த பட்சம் மாகாண மட்டத்திலாவது உடன் முடக்கல் நடைமுறையைப் பின்பற்றுமாறு அரசிடம் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையில் தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்படகூடிய வாய்ப்புகள் உள்ளதாக தொற்றுநோய் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மேலும் இரண்டு வயோதிபர்கள் கோவிட் வைரஸ் தொற்று நோயால் உயிரிழந்துள்ளனர் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.