நாட்டில் தீவிரமாக பரவிச்செல்லும் கொவிட் தொற்றை கட்டுப்படுத்த அரசாங்கத்திடம் முறையான வேலைத்திட்டம் எதுவும் இல்லை. அதேபோன்று இவ்வாறான நிலையில் அரசாங்கத்தின் செல்வாக்கு வீழ்ச்சியடைவது பயங்கரமான நிலையாகும். இதற்கு எதிர்க்கட்சியும் மாற்று வழியொன்றை இதுவரை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கவில்லை. அதனால் இது தொடர்பில் குரல்கொடுக்க…
கொரோன வைரஸிற்கு மத்தியில் பொதுமக்கள் மீது அதிக சுமையை செலுத்தியமைக்காக கடும் விமர்சனங்களிற்கு உள்ளாகியுள்ள ஜனாதிபதி எரிபொருள்விலை அதிகரிப்பை நியாயப்படுத்தியுள்ளார்.
இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டம் பொதுமக்களிற்கும் சிறுபான்மை சமூகத்தினருக்கும் எதிராக பயன்படுத்தப்படுவதால் சிவில் சுதந்திரம் குறைவடைகின்றது என்பதால் புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தை உருவாக்குவதற்கு அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க தயார் என எதிர்கட்சி தெரிவித்துள்ளது.
பிரச்சினைகளிற்கு தீர்வை காணமுடியாவிட்டால் மக்கள் மீது சுமையை செலுத்துவதற்கு பதில் அரசாங்கம் பதவி விலகவேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்எம்மரிக்கார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வவுனியா மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் வவுனியா – தவசிகுளம் பகுதியில் சுகாதார நடைமுறைகளை மீறி திருமண நிகழ்வு இடம்பெற்றமையினால் மணமக்கள் உட்பட அவர்களின் வீட்டார் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.