வவுணதீவு பிரதேச சபை தவிசாளருக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய காரியாலயத்தில் நேற்று (29) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக, அனைத்து முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் தொழிற் சங்கத்தின் தலைவர் ஏ.ஜீ.முபாறக் தெரிவித்தார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகப் போவதாக முகநூல்களில் வெளியிடப்படும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவையென புத்தசாசன அமைச்சின் முன்னாள் ஆலோசகர் கலகம தம்மரங்ஸி தேரர் தெரிவித்தார்.
தற்போதைய உள்ள நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஸ பிரதமராக நியமிக்கப்பட்டாலும் நாட்டை பாதாள குழியில் இருந்து மீட்டெடுப்பது என்பது கடினமான விடயமென தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
2019 ஏப்ரல் இடம்பெற்ற ஈஸ்டர் குண்டு வெடிப்பு சம்பவங்களின் சூத்திரதாரிகள் பற்றிய தகவல்களை வழங்கிய காத்தான் குடியைச் சேர்ந்த ஒரு நபருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இடம்பெற்றுள்ளது.