ஒரு மாதத்துக்குள் அத்தியாவசிய பொருள்களுக்கான தட்டுப்பாடுகள் நீங்கும் என தெரிவித்த அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, அத்தியாவசிய பொருள்களுக்கான தட்டுப்பாடுகள் காணப்படும் வரையில் மக்கள் வரிசையில் நிற்க வேண்டி வருமெனவும் தெரிவித்தார்.
புதிய சட்டம் கொண்டுவரப்படும் வரை மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாது என தேர்தல் சட்ட மறுசீரமைப்பு தொடர்பாக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவரும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
சர்வதேச அளவில் அங்கிகரிக்கப்பட்ட ‘பிளக்செயின்’ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, 15 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்ட நபர்களுக்கான ‘டிஜிட்டல் அடையாள அட்டை’ தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால், நேற்று (03) அறிமுகப்படுத்தப்பட்டது.
நாட்டில் நிலவும் டொலர் பற்றாக்குறையை சீர்செய்வதற்கு பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் அடங்கிய வழிகாட்டல்களைப் பெற்றுக் கொள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனையைப் பெற்றுக் கொள்ள பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
ஒரு புதிய அரசியல் ஆண்டில் என்ன காத்திருக்கிறது? அல்லது என்ன செய்ய வேண்டும்?என்று முடிவெடுப்பதெல்லாம் கடந்த ஆண்டின் தொடர்ச்சியாகத்தான் அமைய முடியும்.எனவே கடந்த ஆண்டைப்பற்றிய தொகுக்கப்பட்ட மதிப்பீட்டின் அடிப்படையில்தான் புதிய ஆண்டைத் திட்டமிடலாம்.