இலங்கை மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த 100 யாத்திரிகர்களுக்கு கச்சதீவு அந்தோனியார் தேவாலய திருவிழாவில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என யாழ். மாவட்ட அரச அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.
அட்டாளைச்சேனை, கோணவத்தை ஆற்றுக்கு ஒதுக்கப்பட்டுள்ள அரச காணியை அடாத்தாகப் பிடித்து வைத்திருப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்பாறை மாவட்ட மேலதிக அரச அதிபர் வீ. ஜெகதீசன் தெரிவித்தார்.
நாட்டில் உள்ள பல அமைச்சர்கள் தமது அரசியல் அதிகாரத்தைப் பலப்படுத்த முயல்கின்றனர் என்பது அவர்களுக்கிடையே ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை அவதானிக்கும் போது தெளிவாகின்றது என தேர்தல் கண்காணிப்பு அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.