டீசல், பெற்றோல், விமானங்களுக்கான எரிபொருள் ஆகியவற்றை எந்தவிதமான தடையுமின்றி ஏப்ரல் மாதத்தில் விநியோகிக்க முடியுமென இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து தான் நீக்கப்பட்டதன் பின்னரே தான் நிம்மதியாக இருப்பதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணையில் உள்ள பிரபல இரண்டு ஆலயங்களில் நேற்று இரவு உண்டியல் உடைத்து பணம் திருடியவர் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறிகண்டி பகுதியில் இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச சபை ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த விபத்து சம்பவம், ஏ9 வீதியில் இன்று காலை 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. முறிகண்டியிலிருந்து கிளிநொச்சி நோக்கி…
எரிபொருள் பிரச்சினைக்கு இவ்வாரம் தீர்வு வழங்காவிட்டால் அடுத்த வாரத்தில் இருந்து நாடு முழுவதிலும் சேவையில் ஈடுபடும் அனைத்து பஸ்களும் சேவையிலிருந்து விலகுமென தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேவர்தன தெரிவித்தார்.
“அனைத்துத் தமிழ்க் கட்சிகளின் உறுப்பினர்களும் ஜனாதிபதி எங்களுடன் பேச வரவேண்டும் என்றே ஆர்ப்பாட்டம் செய்தோம். பேசவாருங்கள் என்று ஆர்ப்பாட்டம் செய்துவிட்டு, அவர் பேச்சுவார்த்தைக்குத் திகதி கொடுக்கும் போது பேச மாட்டோம் என்று சொல்வதில் என்ன நியாயம் இருக்கின்றது?” என தமிழ்த் தேசியக்…