தனது பிறந்தநாளில் மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இளைஞனும் மற்றுமொரு இளைஞனும் நேற்று திங்கட்கிழமை மோட்டார் சைக்கிளில் சென்ற போது மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்கு உள்ளானது.
3,600 மெட்ரிக் தொன் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு (LPG) கொண்ட கப்பல் ஒன்று நாட்டை வந்தடைந்துள்ளது. இந்த கப்பல் இன்று (26) காலை 8.30 மணியளவில் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவர் தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கண்டியிலிருந்து கொழும்பிற்கு ஏற்பாடு செய்துள்ள பேரணி இன்று (26) ஆரம்பமாகியது.
மட்டக்களப்பு கிரான் பகுதியில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 10 பேரையும் சட்டமா அதிபரின் ஆலாசனையின் பிரகாரம் வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று (25) விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.
அரசாங்கத்துக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
துணைவேந்தர்களை நியமிக்கும் விவகாரத்திலும் குழப்பமான சூழ்நிலையை ஏற்படுத்தாமல் அரசு தெளிவான முடிவை எடுக்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
எம்.ஜி.ஆர். எந்த இடத்தில் கட்டிடத்தை கட்டி அ.தி.மு.க. கட்சி இருக்க வேண்டும் என்று சொன்னாரோ அங்கேயேதான் அ.தி.மு.க. இருக்கிறது என்று முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி கூறியுள்ளார்.