பல்வேறு நாடுகளில் உள்ள மக்களுக்கு பல துன்பங்களை ஏற்படுத்திய நாசிசத்தின் மறுபிறப்பைத் தடுப்பது நமது பொதுவான கடமையாக உள்ளது என்று ரஷிய அதிபர் புதின் கூறியுள்ளார்.இரண்டாம் உலகப் போரில் ஹிட்லருடைய ஜெர்மனியின் நாசிச படை தோற்கடிக்கப்பட்டதன் 77வது ஆண்டு நினைவு நாளில்,…
இடைக்கால அரசாங்கத்திற்கு இடமளித்து அரசாங்கம் பதவி விலக வேண்டும் அல்லது அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இடைக்கால அரசாங்கத்திற்கு தயாராக இல்லை என்றால் தேர்தலுக்கு செல்ல வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
வர்த்தக அமைச்சினால் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து வெயன்கொட தனியார் களஞ்சியசாலை ஒன்றில் வைக்கப்பட்டுள்ள 11ஆயிரம் தொன் அரிசி பாவனைக்கு உதவாவகையில் பழுதடைந்துள்ளது. அதனை மீள் சுழற்சி செய்து நுகர்வோருக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
மக்களின் அமைதியான போராட்டத்தை அவசரகால சட்டத்தை அமுல்படுத்தி கட்டுப்படுத்த முடியாது. அதனால் அவசரகால சட்டம் தொடர்பில் மக்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை.
முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்திற்கு அருகில் உள்ள 670 ஏக்கர் காணி கோத்தபாய கடற்படை தளத்திற்காக சுவிகரிப்பதற்காக எதிர்வரும் செவ்வாய்கிழமை 10ம் திகதி நிலஅளவை திணைக்களத்தால் அளவீடு செய்யபட உள்ளதாக சமூக செயற்பாட்டாளர் சஜீவன் தெரிவித்துள்ளார்.