கோட்டா கோ கம, மைனா கோ கம அமைதி போராட்டத்தில் ; அத்து மீறிதாக்குதல் நடத்தப் பட்டமையை தொடர்ந்து, நாடளாவிய ரீதியில் பதிவான வன்முறைகளில் ஆளும்கட்சியை சேர்ந்த, அக்கட்சியைச் சார்ந்த முன்னாள் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் என பேரின் வீடுகள் சேதமாக்கப்பட்டுள்ளதுடன்,…
பல்லின மக்களும் ராஜபக்ஷாக்களுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில், தமிழ்மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள் அடங்கிய ‘நோ ஃபையர் ஸோன்’ என்ற ஆவணப்படத்தின் சிங்கள மொழிபெயர்ப்பை அனைவரையும் பார்க்கச்செய்யவேண்டும் என்று வலியுறுத்தியிருக்கும் அப்படத்தின் இயக்குநர் கெலம் மக்ரே, உண்மையே நீதிக்கான முதற்படி…
இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட உதவிப் பொருட்கள் இலங்கை தமிழர்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று இலங்கை முன்னாள் எம்பி சிவாஜிலிங்கம் வலியுறுத்தியுள்ளார்.
யாழ்ப்பாணம், மானிப்பாய் பகுதியில் வீடுடைத்து 30 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளைத் திருடிய குற்றச்சாட்டில் பெண் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நிதி உதவிக்காக வெளிநாட்டு மன்றம் ஒன்றை அமைப்பது தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
தமிழர்கள் விட்ட கண்ணீர் இன்று இந்த அரசை ஆட்டிப் படைக்கின்றது. எங்களது உறவுகளை அழித்தவர்கள் இன்று தங்களது சொந்த நாட்டிற்குள்ளே பாதுகாப்புத் தேடி ஓடிக் கொண்டிருக்கின்றார்கள் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க அம்பாறை மாவட்டத் தலைவி த.செல்வராணி தெரிவித்துள்ளார்.
தமிழக நுகர்பொருள் வாணிபக் கழகம் மற்றும் சேமிப்புக் கிடங்கு நிறுவனம் சார்பில் ரூ.35.82 கோடியில் சேமிப்பு கிடங்குகள் மற்றும் அலுவலக கட்டிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தந்தை கட்டுமரத்தில் மீன்பிடித்தொழில் செய்து வருகிறார், அவரது மகன் இப்பல்கலைக்கழகத்தில் படித்து கப்பலில் பொறியாளராகவோ அல்லது கேப்டனாகவோ பணியாற்ற போகிறார் என்பது மீனவ சமுதாயத்திற்கு பெருமையாகும்” என்றார்.