இலங்கையில் யானைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுற்றாடல் அமைச்சினால் வெளியிடப்பட்ட தரவுகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ரஞ்சன் மாரசிங்க தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட உள்ளக அரங்கில் முல்லைத்தீவு மாவட்ட விளையாட்டு பிரிவின் ஒழுங்குபடுத்தலுடன் முல்லைத்தீவு மாவட்ட விளையாட்டு வீரர்களுக்காக தேசிய கராத்தே பயிற்றுனர்களினால் வழங்கபட்ட இரண்டு நாள் கராத்தே பயிற்சி கடந்த வியாழக்கிழமை (20) நடைபெற்றது.
போரில் உயிரிழந்த மாவீரர்களை போற்றி வணங்கும் மாவீரர் நாளுக்கான அலங்கரிப்பு ஆயத்த பணிகள் புதுக்குடியிருப்பு கோம்பாவில் பிரதேசத்தில் அலங்கரிப்பு பணி நடைபெற்று மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க தயார் நிலையில் இருக்கின்றது.
350 வகையான மருந்துகளுக்கு கடுமையான விலைக் கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகளை விதிக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
நீண்ட காலமாக முட்டைகளை கொள்ளையடித்துவந்த ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டபோது, அவரிடமிருந்து 3,120 கொள்ளையடிக்கப்பட்ட முட்டைகளும், 2,110 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது அமெரிக்காவில் உள்ள பசில் ராஜபக்ஷ, Browns Hill காணி தொடர்பான வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் சமர்ப்பித்த வைத்திய அறிக்கைகளில் சந்தேகம் இருப்பதாக மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை (21) அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலில் போதைப்பொருளை எரித்தது நான் தான். ஜனாதிபதியாக இருந்த காலத்தில் நான்கு போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை வழங்குவதற்கு கையெழுத்திட்டுள்ளேன் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
எனது குழந்தையின் தந்தை இலங்கை கிரிக்கெட் வீரர் சாமிக்க கருணாரத்ன தான். ஆனால் அவர் தந்தையாக பொறுப்பேற்க மறுப்பு தெரிவிக்கின்றார் என கூறி கிரிக்கெட் வீரர் சாமிக்க கருணாரத்னவுக்கு எதிராக பெண் ஒருவர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
அங்குனுகொலபெலெஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவருக்கு சொந்தமான போதைப்பொருட்களை தடையின்றி சுதந்திரமாக விற்பனை செய்வதற்கு உதவிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் களுத்துறை மாவட்ட பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.