தென்னவள்

இந்தியாவில் டார்ஜிலிங்கில் மண்சரிவு; 14 பேர் உயிரிழப்பு

Posted by - October 5, 2025
இந்தியாவில், மேற்கு வங்காள மாநிலம் டார்ஜிலிங்கில் நேற்று இரவு கடுமழை மழை பெய்துள்ளது. இதனால் அங்குள்ள மிரிக் மற்றும் சுகியா பொகாரி ஆகிய இடங்களில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.
மேலும்

கடல்சார் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு ஆதரவு வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் இலங்கை கடற்படை கையெழுத்து

Posted by - October 5, 2025
இரண்டு வெளிநாட்டு தனியார் கடல்சார் பாதுகாப்பு நிறுவனங்களின் உள்ளூர் பிரதிநிதியுடன் ஒப்பந்தத்தம“ ஒன்றில் இலங்கை கடற்படை கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தம், கொழும்பில் உள்ள கடற்படைத் தலைமையகத்தில் ஒக்டோபர் 3ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
மேலும்

அரசாங்கம்இ ஒரு ஹிட்லர் போக்கிலான செயற்பாட்டை வெளிப்படுத்துகிறது!

Posted by - October 5, 2025
எதிர்க்கட்சிகளின் செல்வாக்கு அதிகரிப்பு மற்றும் அவற்றின் ஒன்றிணைவு குறித்து அச்சம் கொண்டுள்ள அரசாங்கம், ஒரு ஹிட்லர் போக்கிலான செயற்பாட்டை வெளிப்படுத்துவதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க கடுமையாகச் சாடியுள்ளார்.
மேலும்

நடனமாடிக்கொண்டிருந்த இளைஞன் திடீரென மரணம்

Posted by - October 5, 2025
காலி  – அம்பலாங்கொடை பகுதியில் சமய நிகழ்வொன்றில் காவடி நடனமாடிக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் திடீரென நோய்வாய்ப்பட்டு உயிரிழந்துள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும்

மன்னார் காற்றாலை மின்னுற்பத்தித் திட்டத்தை உடன் இடைநிறுத்துங்கள்

Posted by - October 5, 2025
மன்னார் காற்றாலை மின்னுற்பத்தித் திட்டத்தினால் சமூகத்துக்கும், சூழலுக்கும் ஏற்படக்கூடிய பாதிப்பு குறித்து முழுமையாக மதிப்பீடு செய்யப்பட்டு, அது பகிரங்கப்படுத்தப்பட்டு, பாதிக்கப்பட்ட சமூகங்களுடன் முறையான கலந்துரையாடல் முன்னெடுக்கப்படும் வரை அத்திட்டத்தை உடனடியாக இடைநிறுத்துமாறும் மனித உரிமைகள் மற்றும் அபிவிருத்திக்கான ஆசியப்பேரவை இலங்கை அரசாங்கத்திடம்…
மேலும்

தாஜுதீனின் மரணம் தொடர்பில் புதிய விசாரணைகள் ஆரம்பம்

Posted by - October 5, 2025
போதைப்பொருள் கொள்கலன்கள் மீட்கப்பட்டமை தொடர்பான விசாரணையில் பொதுஜனபெரமுவின் முன்னாள் உறுப்பினரான சம்பத் மனம்பேரி விளக்கமறியல்ல வைக்கப்பட்டுள்ள நிலையில் றக்பி வீரரான வசீம் தஜுதீனின் மரணம் தொடர்பில் புதிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
மேலும்

பாதாளக்குழுக்களுடன் தொடர்புள்ள அரசியல்வாதிகள் கலக்கமடைந்துள்ளனர்

Posted by - October 5, 2025
தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பாதாளக் குழுக்களின் உறுப்பினர்களான கெஹல்பத்தரே பத்மே உள்ளிட்ட தரப்பினரிடம் முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அரசியல்வாதிகள் அச்சமடைய தேவையில்லை. தவறு செய்தவர்கள், பாதாள குழுக்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் கலக்கடைந்துள்ளமை நன்றாக தெரிகிறதென பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள்…
மேலும்

மாகாணசபைத்தேர்தல் இழுத்தடிப்பக்கு உள்ளூராட்சி பின்னடைவே காரணம்

Posted by - October 5, 2025
உள்ளூராட்சிமன்றத்தேர்தல்களில் தேசிய மக்கள் சக்தி குறிப்பிட்டுக்கூறத்தக்களவு பின்னடைவை சந்தித்தது. அதன் விளைவாகவே தேர்தலொன்றுக்கு முகங்கொடுப்பதற்கு அஞ்சி, மாகாணசபைத்தேர்தல்களை நடத்தாமல் இழுத்தடிப்புச்செய்துவருகிறார்கள்.
மேலும்

பாக்கு நீரிணையை மாற்றுத்திறனாளி சிறுவன் நீந்தி சாதனை!

Posted by - October 5, 2025
இயலாமைக்கும் சாதனைக்கும் உள்ள தூரத்தை நீந்தி கடந்துச்சென்று சாதனை படைக்க வேண்டும் என்ற இலட்சியத்துடன்,  முழங்காலுக்கு கீழே பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளியான 12 வயதுச் சிறுவன் எடுத்த முயற்சி வெற்றியை கொடுத்துள்ளது.
மேலும்

வாழைச்சேனையில் கட்டாக்காலி கால்நடைகள் அதிகரிப்பு

Posted by - October 5, 2025
கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபை பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கட்டாக்காலி கால்நடைகளின் தொல்லை அதிகரித்துக் காணப்படுவதாக பிரதேச சபை தவிசாளர் எஸ்.சுதாகரன் தெரிவித்தார். இவ்வாறு கட்டாக்காலியாக வீதிகளில் திரியும் ஆடு, மாடு, போன்ற கால்நடைகளினால் தொடர்ந்தும் வீதி விபத்துக்கள் ஏற்படுகின்றன.
மேலும்