தென்னவள்

வவுணதீவில் போலி அனுமதி பத்திரத்துடன் மணல் ஏற்றி சென்ற இருவர் கைது

Posted by - October 18, 2025
மட்டக்களப்பு வவுணதீவில் கட்டிட பொருட்கள் விற்பனை நிலையத்திலிருந்து போலி அனுமதிபத்திரத்தை பயன்படுத்தி உழவு இயந்திரத்தின் மூலம் மணல் கடத்தலில் ஈடுபட்ட இருவரை கொழும்பு புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கங்கள் பணியகத்தின் சோதனை பிரிவினர்  வெள்ளிக்கிழமை (17) கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
மேலும்

பல கோடி ரூபா பெறுமதியான கஜமுத்துக்களுடன் ஒருவர் கைது!

Posted by - October 18, 2025
பதுளை –  மஹியங்கனை பகுதியில்  30 கஜமுத்துக்களுடன்  சந்தேக நபர் ஒருவர் வனஜீவராசிகள் பாதுகாப்ப திணைக்கள அதிகாரிகளால் நேற்று வெள்ளிக்கிழமை (17) கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும்

யாழில் கைக்குண்டு, வாளுடன் இளைஞன் கைது!

Posted by - October 18, 2025
யாழ்ப்பாணத்தில் வன்முறை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கேகாலையை சேர்ந்த இளைஞன் ஒருவர் கைக்குண்டு மற்றும் வாளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும்

யாழில். “தீபலோக” தீபாவளி இலக்கிய கலந்துரையாடல் – தெற்கு கலைஞர்களும் பங்கேற்பு

Posted by - October 18, 2025
“தீபலோக” தீபாவளி இலக்கிய கலந்துரையாடல், யாழ்ப்பாணத் திருவள்ளுவர் கலாசார மையத்தில்  சனிக்கிழமை (18) நடைபெற்றது. இந்நிகழ்வில்  புத்தக கண்காட்சியும் இடம்பெற்றதுடன்  புத்தசாசன சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி, நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிபவனந்தராசா , ரஜீவன் ஜெயசந்திரமூர்த்தி…
மேலும்

மருதானையில் 2,562 பொதிகளுடன் ஒருவர் கைது!

Posted by - October 18, 2025
கொழும்பில் மருதானை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட அழகுசாதனப் பொருட்கள் மற்றும் மஞ்சளுடன் சந்தேக நபர் ஒருவர் மருதானை பொலிஸாரால் நேற்று வெள்ளிக்கிழமை (17) மாலை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும்

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் பேஸ்புக் களியாட்டம்!

Posted by - October 18, 2025
பல்வேறு போதைப்பொருட்களுடன் நீண்ட வார விடுமுறைக்காக நுவரெலியாவிற்கு வந்த 18 பேர் சந்தேகத்தின் பேரில் இன்று சனிக்கிழமை (18) கைது செய்யப்பட்டதாக நுவரெலியா தலைமையக பொலிஸ் தலைமை ஆய்வாளர் பி.எஸ்.சி. சஞ்சீவ தெரிவித்தார்.
மேலும்

வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல்களை மேற்கொண்ட இளைஞனால் 06 குடும்பங்கள் இடம்பெயர்வு

Posted by - October 18, 2025
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் வாளுடன் நடமாடும் இளைஞன் வீதியில் செல்வோர் மீது தாக்குதல் நடாத்துவதுடன், வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல்களை மேற்கொள்ளுவதனால், அக்கிராமத்தில் இருந்து 06 குடும்பங்கள் வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.
மேலும்

முச்சக்கரவண்டி விபத்தில் சிறுவன் பலி!

Posted by - October 18, 2025
முச்சக்கரவண்டி விபத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்துச் சம்பவம் சனிக்கிழமை (18) வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி – காவத்தமுனை பகுதியில் வைத்து இடம்பெற்றுள்ளது.
மேலும்

காசல்ரீ நீர்த்தேக்கத்தை நீர் விமான நிலையமாக சான்றளிக்க ஆய்வுப் பறப்பு!

Posted by - October 18, 2025
காசல்ரீ நீர்த்தேக்கத்தை நீர் விமான நிலையமாக சான்றளித்து உறுதிப்படுத்துவதற்காக ஆய்வுப் பறப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும்

மஹியங்கனையில் விபத்தில் சிக்கி முதியவர் பலி!

Posted by - October 18, 2025
பதுளையில் மஹியங்கனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தலங்கமுவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்