பிரான்சில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு துவிச்சக்கர வண்டியில் பயணம் செய்து , சுமார் 10 ஆயிரம் கிலோ மீற்றர் தூரத்தை துவிச்சக்கர வண்டியில் கடந்து புதன்கிழமை (22) சூரன் என்ற இளைஞன் யாழ்ப்பணத்தை வந்தடைந்துள்ளார்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளி மற்றும் போதைப்பொருள் கடத்தல் காரருமான தினேஷ் நிஷாந்த குமார என்னும் “கம்பஹா பபா“ , வெளிநாட்டிலிருந்து கொண்டு தனது சகாக்கள் மூலம் நாட்டினுள் போதைப்பொருள் வலையமைப்பை விரிவுபடுத்தல் மற்றும் பல கொலைச் சம்பவங்களுக்குத் தேவையான துப்பாக்கிகளை…
கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் பணியகத்திற்கு வாக்குமூலம் ஒன்றை பெறுவதற்கு வரவழைக்கப்பட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் இன்று புதன்கிழமை (22) ஆஜராகி 5 மணித்தியாலங்கள் வாக்குமூலம் அளித்த பின்னர் வெளியேறியுள்ளார்.
2010ஆம் ஆண்டு முதல் இன்றவில் 8 ஊடகவியலாளர்கள் மாத்திரமே பல்வேறு வகையிலான தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ளதாக சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் 22ஆம் திகதி புதன்கிழமை போதை மாத்திரை வியாபாரி ஒருவரும் சந்தேகநபர் ஒருவருமென இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது அவர்களிடமிருந்து 110 போதை மாத்திரைகளும் மீட்கப்பட்டன.
பொருளாதாரத்தை படிப்படியாக ஸ்திரப்படுத்துவதன் மூலமாகவே மக்களின் கனவுகளை நனவாக்க முடியும். அந்த வகையிலேயே தற்போது வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இறக்குமதி வரிகளில் திருத்தங்களை மேற்கொள்வது குறித்து எதிர்காலத்தில் தீர்மானிக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
உலகளாவிய மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் அல்லது இளஞ்சிவப்பு மாதமாகக் கருதப்படும் ஒக்டோபர் மாதத்தில் இந்த விழிப்புணர்வூட்டலுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன ஆகியோருக்கு மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வூட்டலுக்கான சின்னம் மற்றும்…