கவிரதன்

துப்பாக்கி பிரயோகத்தில் 4 பேர் பலி

Posted by - October 29, 2017
கொஸ்கொடை பிரதேசத்தில் இடம்பெற்ற 3 துப்பாக்கி பிரயோ கத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று அதிகாலை இவ்வாறு துப்பாக்கி பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. எக் காரணத்திற்காக இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறித்து இது வரையில் அறியப்படவில்லை. இதன்போது 15…
மேலும்

ஸ்பெயினின் இறையாண்மை, ஒருமைப்பாட்டிற்கு இலங்கை முழு ஆதரவு 

Posted by - October 28, 2017
கேட்டலோனியா, ஸ்பெயினுக்கு சொந்தமான ஒரு பகுதி என்பதே தமது நிலைப்பாடு என இலங்கை அறிவித்துள்ளது. கேட்டலோனிய பிராந்திய சட்டமன்ற சுயாட்சி தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஸ்பெயினின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு இலங்கை முழு…
மேலும்

அவுஸ்திரேலியா பதில் பிரதமர்- ஜூலி பிஷப் 

Posted by - October 28, 2017
அவுஸ்திரேலிய லிபரல் கட்சியின் உபதலைவரும் வௌிவிவகார அமைச்சருமான ஜூலி பிஷப் பதில் பிரதமராக செயற்படவுள்ளார். அவுஸ்திரேலிய பிரதமர் Malcolm Turnbull இஸ்ரேலுக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில்,ஜூலி பிஷப் குறித்த காலப் பகுதியில் பதில் பிரதமராக செயற்படவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இரட்டை…
மேலும்

பாடசாலை மாணவர்களுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்த பெண் கைது

Posted by - October 28, 2017
சிலாபம், மாதம்பை பகுதியில் பாடசாலை மாணவர்களுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்துவந்த பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கிடைத்த தகவலுக்கு அமைய முச்சக்கரவண்டியொன்றை சோதனைக்கு உட்படுத்திய பொலிஸார் 30 வயதான பெண் ஒருவரையும் முச்சக்கரவண்டி சாரதியையும் கைது செய்துள்ளனர். இதன்போது…
மேலும்

திருகோணமலையில் ஆர்ப்பாட்டம்

Posted by - October 28, 2017
வடக்கு கிழக்கு இணைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து திருகோணமலையில் இன்று ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. திருகோணமலை மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. கிழக்கு மக்கள் அமைப்பினால் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  
மேலும்

இந்தியா சென்றார் மஹிந்த

Posted by - October 28, 2017
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்று காலை இந்தியாவுக்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். இன்று அதிகாலை 5.30 மணியளவில் அவர் இந்தியா நோக்கி புறப்பட்டார். இன்று மற்றும் நாளை இந்தியாவின் மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் இடம்பெறவுள்ள சர்வதேச பௌத்த சம்மேளத்தின் பிரதான விருந்தினராக கலந்து…
மேலும்

புதிய அரசியலமைப்புக்கு எதிராக அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும்  வாக்களிக்க வேண்டும் – எல்லே குணவங்ச தேரர்

Posted by - October 28, 2017
அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும், புதிய அரசியலமைப்புக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என எல்லே குணவங்ச தேரர் கோரியுள்ளார். அரசியலமைப்பு விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இடைக்கால அறிக்கை குறித்து, எதிர்வரும் 30 ஆம் திகதி முதல் நாடாளுமன்றத்தில்…
மேலும்

சுதந்திர கட்சிக்கு ஐக்கிய தேசிய கட்சி மாத்திரமே சவால் – மஹிந்த அமரவீர

Posted by - October 28, 2017
உள்ளுராட்சி மன்றத் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சி மாத்திரமே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு சவாலாக அமையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மஹரகமயில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரான அமைச்சர் மஹிந்த அமரவீர…
மேலும்

சுதந்திர கட்சியிடமிருந்து இதுவரை அழைப்பு இல்லை – பெசில்

Posted by - October 28, 2017
எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள தேர்தல்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து தமக்கு அழைப்பு கிடைக்கவில்லை என முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். கொழும்பு நேற்று ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள எந்தத் தேர்தலுக்கும்…
மேலும்

இலங்கை பாரிய கடன்சுமைக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ள – ரணில்

Posted by - October 28, 2017
தெற்காசியாவில் பாரிய கடன்சுமைக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ள நாடு இலங்கை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கடன் சுமையிலுள்ள பொருளாதாரத்துக்கு மத்தியில் இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொடுப்பது…
மேலும்