நிலையவள்

15 கோடி பெறுமதியுடைய கொக்கேய்ன் போதைப் பொருளுடன் நபரொருவர் கைது

Posted by - May 23, 2017
ரூபாய் 15 கோடிக்கும் அதிக பெறுமதியுடைய கொக்கேய்ன் போதைப் பொருளுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். புஞ்சி பெரளையில் வைத்து அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும்

நாளை கொழும்பில் 18 மணிநேரம் நீர் விநியோகம் தடை

Posted by - May 23, 2017
நாளை காலை 10.00 மணி முதல் 18 மணிநேரம் கொழும்பு – 1, கொழும்பு – 2 ஆகிய பிரதேசங்களில் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக நீர்வழங்கல் வடிகால் அமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அத்தியாவசிய பராமரிப்பு நடவடிக்கை காரணமாக இவ்வாறு நீர்…
மேலும்

சாவகச்சேரியில் மின்சாரம் தாக்கி இருவர் காயம்

Posted by - May 23, 2017
சாவகச்சேரி கச்சாய் பகுதியில் ரெலிக்கொம் தொலைபேசி இணைப்பு வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது  இரு உத்தியோகத்தர்கள் மின்சாரம் தாக்கி காயமடைந்துள்ளனர். இச் சம்பவம் இன்றைய தினம் நண்பகல் 12:00 மணியளவில் சாவகச்சேரி கச்சாய் பகுதியில் இடம் பெற்றுள்ளது. இச் சம்பவத்தில் புத்தூர்…
மேலும்

மைத்திரிபால சிறிசேன அவுஸ்திரேலியா பயணமானார்

Posted by - May 23, 2017
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பிற்பகல் அவுஸ்திரேலியா நோக்கி பயணமானார். சிறிலங்கா விமானச் சேவைக்கு சொந்தமான யு.எல் 38 என்ற விமானத்தின் ஊடாக ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினர் புறப்பட்டு சென்றுள்ளனர். அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம்…
மேலும்

பட்டதாரிகளின் பிரச்சினை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவரின் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை

Posted by - May 23, 2017
அரசாங்க தொழில்கோரி வடக்கு, கிழக்கில் போராட்டத்தில் ஈடுபடும் பட்டதாரிகளின் பிரச்சினைக்குத் தீர்வுகாணுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையொன்றை கொண்டுவரவுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனால், நாளைய தினம் இந்தப் பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது. தமக்கு தொழில் வழங்க…
மேலும்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி புதிய அமைப்பாளர்கள் நியமனம்

Posted by - May 23, 2017
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தொகுதி அமைப்பாளர் ஒருவரும் மாவட்ட அமைப்பாளர் ஒருவரும் நேற்று (22) பிற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடமிருந்து தமது நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர். அந்தவகையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மிஹிந்தலை…
மேலும்

பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை -ரணில்

Posted by - May 23, 2017
மத வழிபாட்டுத் தலங்கள் மீது தாக்குதல் நடத்துவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாதுகாப்பு தரப்புக்களுக்கு நேற்று உத்தரவிட்டுள்ளார். புதிய அமைச்சர் பதவிப் பிரமாணம் செய்து கொண்ட பின்னர் பாதுகாப்பு துறைசார் உயர் அதிகாரிகளை அலரி மாளிகைக்கு…
மேலும்

அமைச்சர் ரவியின் கீழ் மேலும் பல நிறுவனங்கள்

Posted by - May 23, 2017
வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு வெளிவிவகார அமைச்சின் கீழ் முன்பு காணப்படாத நிறுவனங்களும் வழங்கப்பட்டுள்ளது. அபிவிருத்தி லொத்தர் சபை, தேசிய லொத்தர் சபை மற்றும் மஹாபொல புலமைப்பரிசில் நம்பிக்கை நிதியம் போன்ற நிறுவனங்கள் வெளிவிவகார அமைச்சின் கீழ் கொண்டுவரப்படவுள்ளது.…
மேலும்

சிறுபான்மை மீதான தொடர் தாக்குதல்கள், இனவாதப் பேச்சுக்கள் – அமைச்சரவையில் மனோ காட்டம்

Posted by - May 23, 2017
இன்று அதிகாலை கஹவத்தை நகரில் தீயினால் இரண்டு கடைகள் சேதமாக்கப்பட்டமை, சிறுபான்மையினர் மீதான திட்டமிட்ட தொடர் தாக்குதல்கள், தனது அமைச்சில் பொதுபல சேனாவின் நடவடிக்கை ஆகிய விவகாரங்கள் தொடர்பில் தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன்,…
மேலும்

மாவனல்லையில் மண் சரிவு ஒருவர் பலி

Posted by - May 23, 2017
மாவனல்லை நகரில் மண் மேடொன்று சரிந்து விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இருவர் மண்ணுக்குள் புதையுண்டுள்ளனர். கட்டிட நிர்மாணப் பணியில் ஈடுபட்டிருந்த போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. இயந்திரங்களின் உதவியுடன் மண்ணை அகற்றி, புதையுண்டிருந்த இருவரையும் மீட்க்கும் பணிகள் தொடர்கின்றது.
மேலும்