நிலையவள்

நீர்மின் உற்பத்தி அதிகரிப்பு

Posted by - July 4, 2017
நீர்மின் உற்பத்தி செய்யப்படும் நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம், நூற்றுக்கு 15 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதனால், நீர்மின் உற்பத்தி நூற்றுக்கு 5 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக அந்த அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும்

பணிப்புறக்கணிப்புக்கு முகங்கொடுக்க அரசாங்கம் தயார் – ஆசு மாரசிங்க

Posted by - July 4, 2017
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாளை முதல் முன்னெடுக்கவுள்ள தொடர் பணிப்புறக்கணிப்பிற்கு முகம் கொடுக்க அரசாங்கம் தயார் என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர், பேராசிரியர் ஆசு மாரசிங்க தெரிவித்துள்ளார். அந்த கட்சியின் தலைமையகம் சிறிகொத்தவில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக…
மேலும்

கடலட்டைகளை விற்பனை செய்து வந்த இரண்டு பேர் கைது

Posted by - July 4, 2017
மன்னார் – வங்காலை கடற்பரப்பில் சட்டவிரோதமாக கடலட்டைகளை விற்பனை செய்து வந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று முற்பகல் கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது. கடற்படையினர் மற்றும் காவற்துறையினர் இணைந்து மேற்கொண்ட தேடுதலின் போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
மேலும்

ஜனாதிபதியை கொலை செய்ய திட்டமிட்ட பெண்ணுக்கு இரண்டு வருட கடூழிய சிறைத் தண்டனை

Posted by - July 4, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சராக கடமையாற்றிய போது அவரை கொலை செய்ய திட்டமிட்டதாக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கில், குற்றத்தை ஒப்புக் கொண்ட பெண்ணுக்கு பத்து வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருடங்கள் கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 62 வயதான குறித்த பெண்ணுக்கு, கொழும்பு…
மேலும்

20.5 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்பு

Posted by - July 4, 2017
பெட்டிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், 20.5 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. தலைமன்னார் – கொழும்பு தபால் தொடரூந்தில் நேற்று இரவு 10.45 மணியளவில் இந்த கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. தொடரூந்தில் சந்தேகத்துக்கு இடமான முறையில் இருந்த இரண்டு பெட்டிகளை சோதனையிட்ட போது,…
மேலும்

மத்துகமை நகரில் தமிழ் பாடசாலை அமைப்பது தொடர்பான கோரிக்கைக்கு அமைச்சரவை அனுமதி!

Posted by - July 4, 2017
களுத்துறை – மத்துகமை நகரில் தமிழ் பாடசாலை அமைப்பதற்கான காணியை பெற்று தருமாறு கோரி சமர்ப்பித்திருந்த அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி கிடைக்க பெற்றுள்ளதாக தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர்  மனோ கணேஷன் தெரிவித்துள்ளார்.
மேலும்

குப்பைகளை வெளியேற்றுவதற்காக விஞ்ஞான ரீதியான முறைமை விரைவில் அறிமுகம்

Posted by - July 4, 2017
குப்பைகளை வெளியேற்றுவதற்காக விஞ்ஞான ரீதியான முறைமை ஒன்று விரைவில் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என என கார்தினல் மெல்கம் ரஞ்சித் கோரிக்கை விடுத்துள்ளார். கொழும்பு ஆயர் இல்லத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.…
மேலும்

புதிய வரிச் சட்டமூலத்தினால் உழைக்கும் மக்களுக்கு பிரச்சினை-பந்துல குணவர்தன

Posted by - July 4, 2017
நாடாளுமன்றில் சமர்பிக்கப்படவுள்ள புதிய வரிச் சட்டமூலத்தினால் உழைக்கும் மக்களுக்கு பல்வேறுப்பட்ட பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என ஒன்றிணைந்த எதிர்கட்சி தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன இதனை குறிப்பிட்டுள்ளார்.…
மேலும்

மஹிந்தவினால் திறக்கப்பட்ட சீசெல்ஸ் தூதரகம் மடகஸ்காருக்கு மாற்றம்

Posted by - July 4, 2017
சீசெல்ஸில் உள்ள இலங்கையின் தூதரகத்தை மடகஸ்காருக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அரசாங்கத்தின் வெளிநாட்டுக்கொள்கையை வர்த்தக ராஜதந்திர ரீதியில் கொண்டு செல்லும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதன் மூலம் அதிகளவான வெளிநாட்டு முதலீடுகளை கவரமுடியும் என்று இலங்கை அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளது.…
மேலும்

இலங்கைக்கு அவசர விஜயம் மேற்கொண்ட சவூதி இளவரசர் – ரணில் விக்ரமசிங்க சந்திப்பு

Posted by - July 4, 2017
 ரணில் விக்ரமசிங்க மற்றும் சவூதி அரேபிய இளவரசர் அல்வலித் பின் தலால் பின் அப்துல் அஸீஸ் ஆகியோருக்கிடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. அவசர விஜயம் மேற்கொண்டு இன்று காலை இலங்கை வந்துள்ள இளவரசர் பாராளுமன்ற கட்டட தொகுதியில் பிரதமரை சந்தித்துள்ளார். இலங்கையில் நான்கு…
மேலும்