நிலையவள்

மற்றுமொரு தனியார் மருத்துவக் கல்லூரி -அமைச்சர் ராஜித

Posted by - September 23, 2017
சார்க் நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் குறைந்த கட்டணத்தில் மருத்துவக் கல்வியைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் இலங்கையில் சார்க் மருத்துவக் கல்லூரியொன்று அமைக்கப்பட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் அண்மையில் நடைபெற்ற சார்க் நாடுகளின் சுகாதார அமைச்சர்களுக்கான கூட்டத்தின்போது, அந்தக் கல்லூரியை…
மேலும்

சப்ரகமுவ ஐ.தே.க.யின் முதலமைச்சர் வேட்பாளராக ஹேஷா எம்.பி.

Posted by - September 23, 2017
பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீங்கி சப்ரகமுவ மாகாணத்தின் முதலமைச்சர் பதவிக்கு போட்டியிட தான் தீர்மானித்துள்ளதாக இரத்தினபுரி மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பி. ஹேஷா விதானகே தெரிவித்துள்ளார். சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் வேட்பாளராக கட்சியின் மத்திய செயற்குழு தன்னை தெரிவு செய்தமையையிட்டு…
மேலும்

மனித உரிமை செயற்பாட்டாளர்களை தண்டிக்கும் நாடுகளில் இலங்கைக்கு14 ஆவது இடம்

Posted by - September 23, 2017
மனித உரிமைகளுக்கான செயற்பாட்டாளர்களை தண்டிக்கும் நாடுகள் பட்டியலில் 14 ஆவது இடம் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு மனித உரிமைகளுக்கான செயற்பாட்டாளர்களை தண்டிக்கும் 21 நாடுகளின் பட்டியலை நேற்று (22) வெளியிட்டுள்ளது. மனித உரிமைகளுக்கான செயற்பாட்டாளர்களை தண்டிக்கும் நாடுகள் பட்டியலில்…
மேலும்

பொரளை 3 மாடிக் கட்டிடத் தொகுதியில் தீ, உயிராபத்து இல்லை

Posted by - September 23, 2017
கொழும்பு, பொரளை, சீவலிப் பகுதியிலுள்ள 3 மாடிக் கட்டிடத்தொகுதியின் முதல் மாடி இன்று (23) காலை 9.00 மணியளவில் திடீரென தீ பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவத்தில் உயிர் ஆபத்துக்கள் எதுவும் ஏற்பட வில்லையென பொலிஸார் அறிவித்துள்ளனர். தீயணைப்பு படையினர்  மின்சார சபை…
மேலும்

கட்டுகஸ்தொடவில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

Posted by - September 23, 2017
கட்டுகஸ்தொட – மாத்தளை வீதியிலுள்ள கட்டுகஸ்தொட பொலிஸ் நிலையத்துக்கு அருகில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யானையொன்றை ஏற்றிச் சென்ற லொறியொன்று கெப் ரக வாகனத்துடனும் பஸ் ஒன்றுடனும் மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த…
மேலும்

போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடும் சாரதிகளை பிடிக்க புதிய திட்டம்

Posted by - September 23, 2017
போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடும் சாரதிகளை இனங்காணும் விசேட செயற்திட்டமொன்று இன்று தொடக்கம் எதிர்வரும் வாரங்களில் கொழும்பு நகரில் செயற்படுத்தப்படவுள்ளதாக காவற்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது. அறிக்கையொன்றை வௌியிட்டு காவற்துறை தலைமையகம் இதனை தெரிவித்துள்ளது. சிவில் உடையில் காவற்துறை அதிகாரிகள் கொழும்பின் பல்வெறு…
மேலும்

யாழ்ப்பாண நகர்ப் பகுதியில் சிரமதான பணி முன்னெடுப்பு!

Posted by - September 23, 2017
சூழலை சுத்தமாக வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி யாழ்ப்பாண நகர்ப் பகுதியில் இன்றைய தினம் சிரமதான பணி முன்னெடுக்கப்பட்டது. சமூக மாற்றத்திற்காக போராடும் ஆண் பெண் சமத்துவக் குழுவினரால் யாழ்.நகர்ப் பகுதியில் இன்றைய தினம் சிரமதானம் முன்னெடுக்கப்பட்டது. சமுக மாற்றத்திற்காக போராடும்…
மேலும்

இயற்கை அனர்த்த பாதிப்புக்களிலிருந்து மீள உலக வங்கி உதவி

Posted by - September 23, 2017
இயற்கை அனர்த்தங்களால் ஏற்படும் பாதிப்புக்களிலிருந்து மீள்வதற்கான உதவிகளை வழங்க உலக வங்கி முன்வந்துள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தியா, பங்களாதேஷ், பூட்டான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் உலக வங்கியின் நிறைவேற்று இயக்குனர் எஸ்.அபர்னா உட்பட்ட உயர்மட்ட குழுவினர் நேற்று…
மேலும்

தங்கம் கடத்த முற்பட்ட பெண் கைது!

Posted by - September 23, 2017
15 இலட்சத்து 72 ஆயிரத்து 550 ரூபாய் பெறுமதியான தங்கத்தை சட்டவிரோதமாக இந்தியாவுக்கு கொண்டு செல்ல முற்பட்ட பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று இந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவின் கோயம்புத்தூர் நோக்கி செல்வதற்காக வந்த குறித்த…
மேலும்

காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்துக்கான உறுப்பினர்களை பரிந்துரைப்பதற்கான ஆலோசனைகள் ஆரம்பம்

Posted by - September 23, 2017
காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்துக்கான உறுப்பினர்களை பரிந்துரைப்பதற்கான ஆலோசனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அரசியலமைப்பு பேரவையால் இதற்கான கலந்துரையாடல்கள் இடம்பெறுவதாக அரசாங்க உயர்மட்ட தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. குறித்த பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டதன் பின்னர், அவை ஜனாதிபதிக்கு அனுப்பபட்டு, அவரால் நியமனங்கள் மேற்கொள்ளப்படும். ஐக்கிய நாடுகள் பொதுச்…
மேலும்