நிலையவள்

படையினர் வசமுள்ள காணிகள் 3 மாதங்களுக்குள் விடுவிக்கப்படும் -வேலுசாமி இராதாகிருஸ்ணன்

Posted by - September 27, 2017
வவுனியா முல்லைத்தீவு மன்னார் மாவட்டங்களில் எதிர்வரும் மூன்று மாதங்களில் படையினர் வசம் உள்ள பொது மக்களின் காணிகளை விடுவிப்பதற்கு பாதுகாப்பு தரப்பினர் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் விடுவிக்க முடியாத காணிகள் தொடர்பாக மாற்று திட்டம் ஒன்றை செயல்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டதாகவும் கல்வி இராஜாங்க அமைச்சர்…
மேலும்

கொலையாளிகளை உடனடியாக துாக்கில் போடுங்கள்!! வித்தியாவின் குடும்பம் ஆவேசம்!!

Posted by - September 27, 2017
வித்தியா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாக தூக்கில் போட வேண்டும் என வித்தியாவின் குடும்பத்தினர் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர். வித்தியாவின் படுகொலை செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று யாழ்.மேல் நீதிமன்றில் வழங்கப்பட்ட நிலையில் இந்த நிலையில் தமது நிலைப்பாடு குறித்து…
மேலும்

டைனமைட் பயன்படுத்தி மீன் பிடித்தால் கடும் நடவடிக்கை

Posted by - September 27, 2017
மீன் பிடிப்பதற்காக டைனமைட் உள்ளிட்ட வெடிபொருட்களை பயன்படுத்தும் மீனவர்களுக்கு எதிராக, சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு, அமைச்சர் மஹிந்த அமரவீர பாதுகாப்பு பிரிவினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். மீனவ ஆலோசனை சபை கூட்டத்தின் போதே, அமைச்சர் கடற்படை மற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கு இது குறித்த பணிப்புரையை…
மேலும்

இலங்கைக்குள் நுழைந்த ஈரானிய பிரஜை கைது

Posted by - September 27, 2017
இலங்கைக்கு போலி கடவுச்சீட்டு  மூலம் வந்த ஈரானிய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் ஈரானிய பிரஜை ஒருவரின் கடவுச்சீட்டை மிக நுணுக்கமான முறையில் தொழிநுட்பத்தை பயன்படுத்தி போலியாக தயாரித்து இலங்கைக்குள் நுழைந்துள்ளார்…
மேலும்

சீனாவுடனான உறவுகள் வலுப்பெற்றுள்ளன – இலங்கை

Posted by - September 27, 2017
சீனாவுடனான உறவுகள் வலுப்பெற்றுள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. இரு நாடுகளினதும் உயர்மட்ட அதிகாரிகள் பரஸ்பர பயணங்களை மேற்கொண்டுள்ளதாகவும் இதன் ஊடாக இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் ஸ்திரமடைந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். சீனாவுடனான வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்திக்…
மேலும்

திக்வெல்ல வாகன விபத்தில் மூவர் பலி

Posted by - September 27, 2017
திக்வெல்ல பொல்கஹமுல்ல பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் நால்வர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திஸ்ஸமஹாராம பகுதியிலிருந்து மாத்தறை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டியொன்று முச்சக்கர வண்டியொன்றுடன் மோதியதாலேயே குறித்த விபத்து நிகழ்ந்துள்ளது.…
மேலும்

உணவுப் பொதிகளின் விலைகள் உயர்த்தப்படவுள்ளன

Posted by - September 27, 2017
உணவுப் பொதிகளின் விலைகள் உயர்த்தப்பட உள்ளதாக இலங்கை சிற்றுண்டுச்சாலை உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். சமையல் எரிவாயுவின் விலை உயர்த்தப்பட்டுள்ள காரணத்தினால் உணவுப் பொதிகளின் விலைகள் உயர்த்தப்பட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். உணவுப் பொதிகளின் விலைகள்…
மேலும்

இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு அமெரிக்கா விஜயம்

Posted by - September 27, 2017
சபாநாயகர் கரு ஜயசூரிய உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஆய்வுச்சுற்றுலா ஒன்றை மேற்கொண்டு ஐக்கிய அமெரிக்கா பயணமாகியுள்ளனர். குறித்த பயணத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான நிமல்சிறிபால டீ சில்வா, பாலித ரங்கேபண்டார, சந்திராணி பண்டார, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்,…
மேலும்

புதிய அரசியலமைப்பின் ஊடாக நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப நடவடிக்கை – ரணில்

Posted by - September 27, 2017
புதிய அரசியலமைப்பின் ஊடாக இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார். குறித்த செயற்பாட்டை புதிய அரசியல் அமைப்பில் அடிப்படை கூறுகளாக…
மேலும்

மத்திய மாகாண கல்வி செயலாளர் இடமாற்றம்

Posted by - September 27, 2017
மத்திய மாகாண கல்வி செயலாளராக கடமையாற்றிய பீ.பி.விஜயரத்ன ஊவா மாகாண பிரதான செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண பிரதான செயலாளர் சரத் பிரேமவன்க்ஷ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தனக்கு எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். உலகின் மிக நீண்ட மணப்பெண்…
மேலும்