நிலையவள்

தேர்தல் கண்காணிப்பிற்காக 7000 கண்காணிப்பாளர்கள் கடமையில் – பெப்ரல்

Posted by - January 24, 2018
உள்ளூர் அதிகார சபைத் தேர்தல் கண்காணிப்பிற்காக 7000 கண்காணிப்பாளர்களை கடமையில் ஈடுபடுத்த எதிர்பார்ப்பதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளவர்கள் தற்போது பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் பெப்ரல் அமைப்பு தெரிவிக்கின்றது. எதிர்வரும் 10 ஆம் திகதி நாடு முழுவதும்…
மேலும்

ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்கும் பொறுப்பை தான் பொறுப்பேற்பதாக ஜனாதிபதி தெரிவிப்பு

Posted by - January 24, 2018
மத்திய வங்கி பிணைமுறி விவகாரம் தொடர்பில் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு மற்றும் பாரிய ஊழல், மோசடிகள் குறித்து கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் சரியாகவும் முறையாகவும் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அதன் அடுத்த கட்ட நடவடிக்கைகளை உரிய முறையில்…
மேலும்

கிளிநொச்சியில் சிறுவன் ஒருவனை, சிறைக் காவலர்கள் தாக்கியுள்ளனர் (காணொளி)

Posted by - January 24, 2018
கிளிநொச்சியில் நேற்று மாலை கரடிப்போக்கு பகுதியில் உள்ள உணவகம் ஒன்றிற்குள் வைத்து சிறுவன் ஒருவனை சிவில் உடையில் இருந்த சிறைக்காவலர்கள் இருவரும், சிறைக்காவலர்களது சீருடையில் இருந்த இருவரும் சரமாரியாக தாக்கியுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கையில், கரடிப்போக்கு…
மேலும்

மன்னாரில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் சார்பாக போட்டியிடுகின்ற வேட்பாளர்களை ஆதரிக்கும் தேர்தல் பிரச்சாரக் கூட்டம்(காணொளி)

Posted by - January 24, 2018
மன்னார் மாவட்டத்தில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் சார்பாக போட்டியிடுகின்ற வேட்பாளர்களை ஆதரித்து நேற்று தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்று நடைபெற்றது. மன்னாரில் எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் சார்பாக போட்டியிடுகின்ற வேட்பாளர்களை ஆதரிக்கும்…
மேலும்

யாழ்.புங்குடுதீவு பகுதியில் கடற்படையினரின் கவச வாகனம் மோதி பாடசாலை மாணவியொருவர் பலி!(காணொளி)

Posted by - January 24, 2018
யாழ்.புங்குடுதீவு பகுதியில் கடற்படையினருக்கு சொந்தமான கவச வாகனம் மோதி பாடசாலை மாணவியொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.புங்குடுதீவு மகா வித்தியாலயத்திற்கு அருகில் இவ்விபத்து சம்பவம் இடம்பெற்று உள்ளது. குறித்த விபத்து தொடர்பில் தெரிய வருவதாவது, ரோமன் கத்தோலிக்க பாடசாலையில் கல்வி கற்கும் குறித்த…
மேலும்

செல்லுபடியான அடையாள அட்டை இல்லாதவர்கள் வாக்களிக்க முடியாது- மஹிந்த

Posted by - January 24, 2018
உள்ளூராட்சி சபைத் தேர்தல் வாக்கெடுப்பின் போது செல்லுபடியான அடையாள அட்டை இல்லாத எவரையும் வாக்களிக்க அனுமதிப்பதில்லை என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய கூறியுள்ளார். அடையாளத்தை வௌிப்படுத்தும் செல்லுபடியான அட்டை இல்லாத வாக்காளர்கள் தேர்தல் ஆணைக்குழுவிடம் இருந்து அடையாள உறுதிப்பத்திரம்…
மேலும்

இந்தோனேசிய ஜனாதிபதி இலங்கை விஜயம்

Posted by - January 24, 2018
இந்தோனேஷிய ஜனாதிபதி ஜோகோ விடோடோ இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று இலங்கைக்கு வரவுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இந்தோனேஷிய ஜனாதிபதிக்காக இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் 21 இராணுவ மரியாதை வேட்டுக்களும் தீர்க்கப்படவுள்ளன. இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுடன் இருதரப்பு…
மேலும்

சர்வதேச நீதிபதிகளை அனுமதிக்கப் போவதில்லை – மஹிந்த சமரசிங்க

Posted by - January 24, 2018
உண்மைகளை கண்டறியும் பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகளை அனுமதிக்கப் போவதில்லை என அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார். குறித்த சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், சர்வதேச நீதிபதிகள்…
மேலும்

சைட்டம் தொடர்பில் மற்றுமொரு கலந்துரையாடல் 26 இல்

Posted by - January 23, 2018
மாலபே சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பான ஜனாதிபதி உபகுழுவின் அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், இது தொடர்பிலான மேலதிக கலந்துரையாடலொன்று எதிர்வரும் 26ம் திகதி இலங்கை மருத்துவ சபையில் இடம்பெறவுள்ளதாகவும் சட்டமா அதிபர் இன்று உச்சநீதிமன்றத்துக்கு அறிவித்தார். சட்டமா அதிபர் சார்பில், மேலதிக…
மேலும்

பாராளுமன்ற பணியாளர்களுக்கு பயிற்சி

Posted by - January 23, 2018
பாராளுமன்றத்தில் பணிபுரிய புதிதாக இணைந்த அதிகாரிகளுக்கான பயிற்சி நிகழ்வொன்று பத்தரமுள்ள வோட்டர்ஸ் எட்ஜ் வளாகத்தில் இடம்பெற்றது. சபாநாயகர் கரு ஜயசூரியவின் வேண்டுகோளுக்கு இணங்க ஐக்கிய நாடுகள் சபையின் அனுசரணையில் இந்த பயிற்சி நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும்