நிலையவள்

காணாமல் ஆக்கப்பட்ட 29 சிறுவர்களின் பெயர்களை வெளியிட்டது மனித உரிமை அமைப்பு

Posted by - May 16, 2018
சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்த பின்னர் சிறிலங்கா படையினரின் தடுப்புக்காவலில் இருந்த 29 சிறுவர்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக, அனைத்துலக மனித உரிமை அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது. தென்னாபிரிக்காவை மையமாகக் கொண்ட அனைத்துலக உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் என்ற அமைப்பு நேற்று…
மேலும்

இரணைதீவில் மீளக்குடியமர அனுமதி – 8 ஏக்கர் காணிகளை விடுவிக்க கடற்படை மறுப்பு

Posted by - May 16, 2018
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இரணைதீவில், 8 ஏக்கர் நிலப்பரப்பை விடுவிக்க மறுப்புத் தெரிவித்துள்ள சிறிலங்கா கடற்படை, ஏனைய பகுதிகளில் பொதுமக்கள் மீளக் குடியமர அனுமதி அளித்துள்ளது. 1992ஆம் ஆண்டு இரணைதீவில் இருந்து இடம்பெயர்ந்து, முழங்காவில் பகுதியில் வாழ்ந்து வந்த மக்கள், தம்மை…
மேலும்

நடு வீதியில் பற்றி எரிந்த முச்சக்கர வண்டி

Posted by - May 16, 2018
மன்னார் நகர்ப் பகுதி நடு வீதியில் முச்சக்கர வண்டி ஒன்று தீப் பற்றி எரிந்துள்ளது.இச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றது. தீ விபத்துக்கான காரணம் இதுவரை அறிய முடியவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.சம்பவம் தொடர்பில் மன்னார் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மேலும்

இடமாற்றத்தை ஏற்காத அரச ஊழியர்களின் சம்பளம் இடைநிறுத்தம்- கல்வி அமைச்சு

Posted by - May 16, 2018
தேசிய பாடசாலைகளில் 10 வருடங்களுக்கு மேல் கடமையாற்றும் கல்வி சாரா ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட  இடமாற்றக் கடிதங்களை ஏற்றுக் கொள்ளாதவர்களின் சம்பளம் நிறுத்தப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. தேசிய பாடசாலையொன்றில் 10 வருடங்களுக்கு மேல் கடமையாற்றிய கல்வி சாரா ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட…
மேலும்

அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் போராட்டம் 22 ஆரம்பம்- JVP

Posted by - May 16, 2018
வரிக்கு மேல் வரி சுமத்தி மக்களை சிரமப்படுத்தும் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் போராட்டம் இம்மாதம் 22 ஆம் திகதி கொழும்பிலிருந்து ஆரம்பிப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் சபை உறுப்பினர் கே.டீ. லால்காந்த தெரிவித்துள்ளார். பத்தரமுல்லை, பெலவத்தை, மக்கள் விடுதலை முன்னணியின்…
மேலும்

மீண்டும் டெங்கு எச்சரிக்கை

Posted by - May 16, 2018
இவ்வருடத்தின் கடந்த ஐந்தரை மாதங்களாக நாடு முழுவதும் 18 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இவர்களில் 13 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளதாகவும் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் விசேட வைத்திய நிபுணர் பிரசிலா சமரவீர தெரிவித்துள்ளார். இந்த நோயாளர்களில்…
மேலும்

அரச மரக்கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் கைது

Posted by - May 16, 2018
அரச மரக்கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர்  அநுருத்த பொல்கம்பொல குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். 8 மில்லியன் பணமோசடி செய்த குற்றத்திற்காக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த குற்றத்திற்காகவே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பி.…
மேலும்

இலங்கை மற்றும் சீனாவுக்கிடையிலான வர்த்தக பெறுமதி அதிகரிப்பு

Posted by - May 16, 2018
இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகத்தின் பெறுமதி நான்கு தசம் நான்கு மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை அதிகரித்துள்ளது. இதன்மூலம் இலங்கைக்கு கூடுதலான நன்மைகள் கிடைக்கின்றன. சீனாவின் மாநிலங்களுடனான பொருளாதார உறவுகளை தற்சமயம் வலுவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது
மேலும்

பொலிஸ் அதிகாரிகளின் இடமாற்றத்தில் அரசியல் அழுத்தங்கள் இல்லை- ரஞ்ஜித்

Posted by - May 16, 2018
பொலிஸ் அதிகாரிகளின் இடமாற்றம் தொடர்பில் அரசியல்வாதிகள் சிலர் அழுத்தம் கொடுத்தாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை தான் நிராகரிப்பதாக பொது நிர்வாக முகாமைத்துவம் மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் ரஞ்ஜித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் உரையாற்றும் போதே அவர்…
மேலும்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய அபிவிருத்திக்கு ஜப்பான் உதவி

Posted by - May 16, 2018
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய ஜப்பானின் ஜெய்க்கா நிறுவனம் 300 மில்லியன் ரூபா நிதியை வழங்கியுள்ளது. விமான நிலையத்தின் இரண்டாவது இறங்கு தளத்தை அமைக்கவும் ஜப்பான் அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது
மேலும்