நிலையவள்

துப்பாக்கி சூட்டில் இருவர் பலி

Posted by - July 8, 2018
கொழும்பு, கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜம்பட்ட வீதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த நால்வரையும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அதில் இருவர் உயிரிழந்துள்ளனர். 58 வயதுடைய ஆண் ஒருவரும் 50 வயதுடைய…
மேலும்

வாகனம் வைத்துள்ள ஒவ்வொருவரிடமிருந்தும் வரி- கூட்டு எதிர்க் கட்சி எதிர்ப்பு

Posted by - July 8, 2018
வாகனம் வைத்திருக்கும் ஒவ்வொரு நபரிடமிருந்தும் வருமான வரி அறவிடப்பட வேண்டும் என தேசிய வருமான வரிகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்திருந்த கருத்தை கூட்டு எதிர்க் கட்சி கடுமையாக எதிர்த்துள்ளது. எமது நாட்டில் ஒருவர் ஒரு வாகனத்தை வாங்குவதற்கு குறைந்தது 10 வருடங்கள்…
மேலும்

நாட்டை பாதுகாக்க மகிந்தவின் ஆட்சியே அவசியம்-கோட்டாபய

Posted by - July 8, 2018
தற்போதைய அரசாங்கத்தை கவிழ்த்து எதிர்காலத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் தலைமைத்துவத்திலான அரசாங்கம் அமைய உள்ளது என பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொலன்னாவ பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டார்.முன்னாள் ஜனாதிபதி மகிந்த…
மேலும்

விபத்தில் சிறுவன் உயிரிழப்பு

Posted by - July 8, 2018
ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு முன்பாக இன்று அதிகாலை 03.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் சிறுவனொருவன் உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த இந்த விபத்தில் 09 வயதுடைய ஏறாவூர் பகுதியைச் சேர்ந்த சாபித் எனும் சிறுவனே உயிரிழந்துள்ளான்.…
மேலும்

கூடிய விலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விற்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Posted by - July 8, 2018
12 தசம் ஐந்து கிலோ கிராம் எடை கொண்ட சமையல் எரிவாயுவின் விலை 138 ரூபாவினால் குறைக்கப்பட்டிருந்தது. இதற்கு அமைவாக ஐந்து கிலோ கிராம் மற்றம் இரண்டு தசம் 3 கிலோ கிராம் எடைகொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையும் குறைக்கப்பட்டுள்ளன.…
மேலும்

பொல்கொட பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது

Posted by - July 8, 2018
பண்டாரகம பொல்கொட பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில் அமைந்துள்ள கால்வாய் ஒன்றிலிருந்து 52 வயதான குடும்பஸ்த்தர் ஒருவரின் சடலம் நேற்று முன்தினம் மீட்கப்பட்டது. சடலமாக மீட்கப்பட்டவரின் உடம்பில் வெட்டு காயங்கள் மற்றும் கட்டைகளால் தாக்கப்பட்டமைக்கான…
மேலும்

கையகப்படுத்தப்பட்டிருந்த சனசமூக நிலையம் வலி கிழக்கு சபையால் திறக்கப்பட்டது

Posted by - July 8, 2018
கோப்பாயில் நீண்ட காலமாக தனியார் ஒருவரின் கையகப்படுத்தலில் இருந்த வடகோவை நாவலர் சபாபதி சனசமூக நிலையம் மீளவும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் முயற்சியினால் மீள இயங்கவைக்கப்பட்டுள்ளது. கோப்பாய் பிரதேசத்தில் 1953 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட வடகோவை நாவலர் சபாபதி சனசமூக…
மேலும்

அம்பாறை குளத்தில் படகு விபத்து, 4 பேரைக் காணவில்லை-பொலிஸ்

Posted by - July 8, 2018
அம்பாறை எக்கல்ஓயா குளத்தில் இன்று காலை 7.00 மணியளவில் படகொன்று விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்தப் படகில் 9 பேர் பயணித்துள்ளனர். தற்பொழுது வீசி வரும் வேகமான காற்றினால், படகை கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் போயுள்ளதாகவும்…
மேலும்

நொச்சியாகம கொலை சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது

Posted by - July 8, 2018
நொச்சியாகம, வன்னியகுளம் பகுதியில் இடம்பெற்ற கொலை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் உட்பட மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அநுராதபுரம், வன்னியகுளம் பகுதியை சேர்ந்த சுஜீவ பிரசன்ன குமார என்பவர் நேற்று முன்தினம் (06) பகல் இனம்தெரியாத குழு ஒன்றினால்…
மேலும்

ஹெரோயின் மீட்பு

Posted by - July 8, 2018
களுபோவில மற்றும் பத்தரமுல்லை ஆகிய பிரதேசங்களிலிருந்து 1248 மில்லியன் ரூபா பெறுமதியான ஹேரோயின் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினால் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். 103.4 கிலோ கிராம் ஹேரோயினே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. சந்தேகத்தின் பேரில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள்…
மேலும்