நிலையவள்

புலிகளுக்கு மீண்டும் தலைதூக்க சந்தர்ப்பம் அளிக்க போவதில்லையாம் -நவீன்

Posted by - July 22, 2018
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள எந்தவொரு இராணுவ முகாமையும் அகற்றுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி நடவடிக்கை எடுக்காது என அந்த கட்சியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பெருந்தோட்டத்துறை அமைச்சருமான நவீன் திஸாநாயக்க உறுதிபட தெரிவித்தார். மேலும், நவீன் திசாநாயக்க மற்றும்…
மேலும்

மீண்டும் வேலை நிறுத்த போராட்டத்திற்கு தயாராகும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

Posted by - July 22, 2018
மீண்டும் வேலை நிறுத்த போராட்டம் ஒன்றை முன்னெடுக்க உள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவிக்கின்றது. வேலைநிறுத்த போராட்டத்தை முன்னெடுப்பதற்கான திகதி முடிவு செய்வதற்காக இன்று (22) அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய செயற்குழு கூட்டம் ஒன்று கூடியதாக டொக்டர்.…
மேலும்

நாட்டை ஆட்சி செய்யும் உரிமை ஶ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு மட்டுமே இருக்கிறது-சரத்

Posted by - July 22, 2018
நாட்டை ஆட்சி செய்யும் உரிமை ஶ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு மட்டுமே இருப்பதாக அமைச்சர் பேராசிரியர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார். பதுளை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதிக முறை நாட்டை ஆட்சி செய்யும் வாய்ப்பு கிடைத்தது ஶ்ரீலங்கா சுதந்திர…
மேலும்

வாகன விபத்தில் ஒருவர் பலி

Posted by - July 22, 2018
பாதெனிய – அநுராதபுரம் பகுதியின் மஹவ, அம்பகஸ்வெவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கன்டேனர் வாகனம் ஒன்று சிறிய ரக லொறி ஒன்றுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். விபத்து பலத்த காயமடைந்த லொறி ஓட்டுனரை வாரியபொல…
மேலும்

கடனை செலுத்த முடியாதவர்களின் கடனை அரசாங்கம் செலுத்தும்-சமரவீர

Posted by - July 22, 2018
வடக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் ஒரு இலட்சம் ரூபா வரையில் கடனைப் பெற்று திருப்பிச் செலுத்த முடியாதவர்களின் கடன் மற்றும் வட்டியை அரசாங்கம் செலுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளும் என நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா…
மேலும்

இராணுவத்துக்குப் பொலிஸ் அதிகாரம்- மஹிந்த

Posted by - July 22, 2018
இராணுவத்துக்குப் பொலிஸ் அதிகாரத்தைக் கொடுத்து பொலிஸ் இராஜ்ஜியமொன்று உருவாகிக் கொண்டு வருவதாகவும், இதற்காக நீதிமன்றமும் பயன்படுத்தப்படுவதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார். இன்று அபயராம விகாரையில் நடைபெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டார். இந்த அரசாங்கம் அதிகூடிய…
மேலும்

நாட்டைப் புரட்டி விட்டு கிராமத்தையும் புரட்ட இந்த அரசாங்கம் தயாராகியுள்ளது- கோட்டாப

Posted by - July 22, 2018
இந்த நல்லாட்சி அரசாங்கம் முழு நாட்டையும் தேசிய மட்டத்தில் புரட்டி விட்டு, கிராமத்தையும் புரட்டுவதற்கு தயாராகியுள்ளதாகவும் இதற்காகவே கம்பெரலிய செயற்திட்டத்தை முன்னெடுத்து வருவதாகவும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். நுவரெலியா பிரதேசத்தில் இடம்பெற்ற “எளிய” நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத்…
மேலும்

அரசாங்கத்தின் இயலாமையே தூக்குத் தண்டனை தீர்மானம்- சிறிவிமல தேரர்

Posted by - July 22, 2018
கைதிகளுக்குத் தூக்குத் தண்டனையை வழங்க அரசாங்கம் முன்னெடுத்துள்ள தீர்மானமானது, அரசாங்கத்தின் இயலாமையையே எடுத்துக் காட்டுவதாக கெட்டம்பே ராஜோபவநாராம விகாராதிபதி கெப்படியாகொட சிறிவிமல தேரர் தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுனவின் தலைவர் ஜி.எல். பீரிஸ் இன்று தேரரைச் சந்தித்து ஆசீர்வாதம் பெறச் சென்ற போதே…
மேலும்

நள்ளிரவு முதல் புகையிரத தொழில்நுட்ப அதிகாரிகள் பணிப்பகிஷ்கரிப்பு

Posted by - July 22, 2018
புகையிரத தொழில்நுட்ப அதிகாரிகள் உட்பட  உதவியாளர்கள் இன்று நள்ளிரவு முதல் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பணிப் பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக புகையிரத தொழினுட்ப முகாமைத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் கமல் பீரிஸ் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், புகையிரத…
மேலும்

விபச்சார விடுதி சுற்றிவளைப்பு

Posted by - July 22, 2018
வெலிகட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இராஜகிரிய பகுதியில் ஆயுர்வதே நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதியொன்றை சுற்றி வளைத்த பொலிஸார் இரண்டு பெண்களை கைதுசெய்துள்ளனர். இச் சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட பெண்கள் கடுகண்ணாவ மற்றும் தெஹிஅத்தகண்டிய பிரதேசங்களைச் சேர்ந்த 39, 43…
மேலும்