நிலையவள்

அரசாங்கத்தின் செயற்பாடுகளை கண்டு அஞ்சப் போவதில்லை-செஹான்

Posted by - August 16, 2018
சபாநாயகர் நாட்டின் இயற்றப்பட்ட அரசியலமைப்பின் பிரகாரம் பதவி வகிக்க வேண்டுமே தவிர ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் பிரதமரால் எழுதப்பட்ட அரசியலமைப்புக்கு அல்ல என பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மக்களின்…
மேலும்

முல்லைத்தீவிலிருந்து பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்ட தென்னிலங்கை மீனவர்கள்

Posted by - August 16, 2018
முல்லைத்தீவு நாயாறு பகுதியிலிருந்து வாடிகள் எரிப்பு தொடர்பில் கைதான தென்னிலங்கை மீனவர்கள் பொலிஸ் பாதுகாப்புடன் இன்று வெளியேறினர்.முல்லைத்தீவு நாயாறு பகுதியில் கடந்த 13 ஆம் திகதியன்று  தமிழ் மீனவர்களுக்கு சொந்தமான 8 மீன் வாடிகள் மற்றும் உடைமைகள் விஷமிகளால் எரித்து  அழிக்கப்படட…
மேலும்

சமையல் எரிவாயு விலை குறித்து புதிய விலை சூத்திரம்

Posted by - August 16, 2018
சமையல் எரிவாயு விலை குறித்து புதிய விலைச் சூத்திரம் ஒன்றை அறிமுகப்படுத்துவதற்கு வாழ்க்கைச் செலவு குறித்து ஆராயும் குழு தீர்மானித்துள்ளது. கைத்தொழில் வர்த்தகத்துறை அமைச்சர் ரிஷாத் பதியூதீனின் ஆலோசனைக்கமைவாகவே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே குறித்த சூத்திரம் தயாரிக்கும் வேலைத்திட்டம் தற்போதைக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.…
மேலும்

உயிரின வளங்களை பாதிக்கும் தங்கூசி வலைகள் அழிப்பு

Posted by - August 16, 2018
தண்ணிமுறிப்பு குளத்தில் உயிரின வளங்களினை முற்றாக அழிக்கக்கூடிய தடைசெய்யப்பட்ட பெருமளவிலான தங்கூசி வலைகள் மீட்கப்பட்டு மீனவ சங்கங்களின் உதவியுடன் அழிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத வலைகளினை பயன்படுத்தி நன்னீர் மீன்பிடியில் ஈடுபடுபவர்களை கட்டுப்படுத்தும் நோக்குடன் தேசிய நீர் உயிரின வளர்ப்பு அதிகாரசபையின் பிராந்திய அலுவலர்கள்…
மேலும்

அரச முஸ்லிம் பாடசாலைகளுக்கு நாளை முதல் விடுமுறை- கல்வி அமைச்சு

Posted by - August 16, 2018
அரச முஸ்லிம் பாடசாலைகளின் இரண்டாம் தவணை விடுமுறை நாளை (17)  வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, நாளை (17) வெள்ளிக்கிழமை முதல்  எதிர்வரும் 10 நாட்களுக்கு இந்த விடுமுறை வழங்கப்படவுள்ளது. மூன்றாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் ஆகஸ்ட் 27 ஆம் திகதி ஆரம்பமாகும்…
மேலும்

ATM அட்டை வைத்திருப்பவர்களின் கணக்குகள் மீது சைபர் தாக்குதல் ஆபத்து- FBI தகவல்

Posted by - August 16, 2018
உலகம் முழுவதிலும் அமைக்கப்பட்டுள்ள சுய பணக் கொடுக்கல் வாங்களுக்கான ஏ.ரி.எம். இயந்திரங்களின் மீது பாரியளவில் பண மோசடிகளை மேற்கொள்ளும் விதத்திலான சைபர் தாக்குதல் இடம்பெறும் ஆபத்து உள்ளதாக அமெரிக்காவின் எப்.பீ.ஐ. அமைப்பு சர்வதேச நாணய நிதியத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்கிகளில் கணக்கு…
மேலும்

இந்திய மருத்துவ கழிவுகள் கரையொதுங்கிய சம்பவத்தில் இராஜதந்திர தலையீடுகள்!-பாட்டலி

Posted by - August 16, 2018
இந்திய மருத்துவ கழிவுகள் இந் நாட்டின் கடற்பரப்பில் கரையொதுங்கிய சம்பவம் தொடர்பில் இராஜதந்திர மட்டத்தில் தலையீடுகள் இருப்பதாக அமைச்சர் பாட்டலி சம்பிக ரணவக தெரிவித்துள்ளார். எந்தவொரு நாடாக இருப்பினும் மருத்துவ கழிவுகளை அகற்றுவதற்கு முறையான நடவடிக்கை இருக்க வேண்டும் என அவர்…
மேலும்

யாழ். வைத்தியசாலையின் சேவை குறித்து பெருமிதம் கொள்கிறோம்-விக்னேஸ்வரன்

Posted by - August 16, 2018
யாழ். போதனா வைத்தியசாலையானது மிகக் குறைந்த வளங்களுடன் செயலாற்றுகின்றபோதும் அதன் சேவைகள் மிகப் பெரிய அளவில் மக்களுக்குக் கிடைப்பதையிட்டு நாம்  பெருமிதம் கொள்ள வேண்டும் என்று வட மகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். யாழ்.போதனா வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட தாதிகள் விடுதி…
மேலும்

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பெற சுயாதீனமாக செயற்பட வேண்டும்-அஜித் பி.பெரேரா

Posted by - August 16, 2018
எதிர்க்கட்சி தலைவர் பதவியினை கூட்டு எதிரணியினர் பெற வேண்டுமாயின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதிநிதித்துவத்தை நீக்கிக் கொண்டு சுயாதீனமாக இருக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தொழிற்சங்க செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான அஜித் பி.பெரேரா தெரிவித்தார். ஐக்கிய தேசியக்…
மேலும்

புதிய அபராத முறையை நீக்கப் போவதில்லை- நிமல்

Posted by - August 16, 2018
வீதி விபத்துக்களை கட்டுப்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட புதிய அபராத முறையை எவ்வித காரணங்களுக்காகவும் மீளப் பெறுவதில்லை என்று போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கூறியுள்ளார். இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். அபராத முறையை நீக்க…
மேலும்