கூட்டமைப்பின் தலைமைப் பதவி முந்தி வந்த செவி; சிங்கள அரசின் எதிர்க்கட்சித் தலைவர் பதவி பிந்தி வந்த கொம்பு. முன்னர் வந்த செவியை, பிந்தி வந்த கொம்பு மறைக்க அனுமதித்தால் தமிழினத்தின் சாபத்தைச் சுமப்பது தவிர்க்க முடியாது போகும்.
2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்தபின்பு, தமிழீழ விடுதலைப்புலிகளின் படகுத் தெரிழநுட்பத்தை பெருந்தொகைப் பணம் கொடுத்து ஈரான் நாடு பெற்றுக்கொண்டுள்ளதாகவும், இதனை ஈரானுக்கு அப்போதைய பாதுகாப்பு செயலராக இருந்த கோத்தபாய ராஜபக்ஷ வழங்கினார் எனவும் தெரியவந்துள்ளது.
நாடு சுதந்திரம் அடைந்து 70-வது ஆண்டு சுதந்திர தினத்தை கோலாகலமாக கொண்டாடி முடித்துள்ள நிலையில், ஒடிசா மாநிலத்தில் விபத்தில் இறந்த ஒரு மூதாட்டியின் உடலை பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் செல்வதில் ஏற்பட்ட பிரச்சினைகள் நெஞ்சை கசக்கிப் பிழிவதாக அமைந்துள்ளது.
வைத்தியர்களின் சிகிச்சை முறையில் சந்தேகமோ அல்லது போலி வைத்தியர்கள் என்று தெரிந்தாலோ பொதுமக்கள் கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்களில் புகார் தெரிவிக்கலாம் என்று சுகாதாரத்துறை இணை இயக்குனர் கூறி உள்ளார்.
மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான ரூ.58 கோடி மதிப்பிலான இடத்தை தனியாருக்கு பட்டா மாறுதல் வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
காஷ்மீர் பிரச்சனையை சர்வதேச அரங்குகளில் எழுப்புவதற்காக 22 பாராளுமன்ற உறுப்பினர்களை சிறப்பு தூதர்களாக பாகிஸ்தான் நியமித்துள்ளது.இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையே உள்ள காஷ்மீர் பிரச்சனை நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் நிலுவையில் உள்ளது.
ஆட்சி கவிழ்ப்பு தொடர்பாக, முன்னாள் அதிபர் அப்துல்லா குல்லின் ஆலோசகர் உட்பட 3 முன்னாள் தூதர்களை அதிபர் எர்டோகன் தலைமையிலான துருக்கி அரசு கைது செய்துள்ளது.