தென்னவள்

லசந்த கொலைக்கான பொறுப்பை ஏற்று தற்கொலை செய்தவரின் சடலம் தோண்டியெடுக்கப்பட்டது

Posted by - October 20, 2016
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலைக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்து, கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்ததாகக் கூறப்படும் முன்னாள் இராணுவப் புலனாய்வு உறுப்பினர் இலந்தாரிகே எதிரிசிங்க ஜயமான்னவின் சடலம் இன்று (20) தோண்டியெடுக்கப்பட்டது.
மேலும்

சம்பூரில் சூரிய மின் உற்பத்தித் திட்டம் அமைக்க இந்தியா விருப்பம்!

Posted by - October 20, 2016
சம்பூரில் சூரிய மின் உற்பத்தித் திட்டத்தை அமைப்பதற்கு இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளது. சம்பூரில் அமைக்கத் திட்டமிட்டிருந்த 500 மெகாவாட் அனல் மின் நிலையத்தை அமைப்பதற்கு மக்கள் எதிர்ப்புத் தெரிவித்திருந்த நிலையில் அரசாங்கம் அதனைக் கைவிடுவதாக அறிவித்து ஒரு மாதத்திற்குள் இந்தியா சூரிய…
மேலும்

அமெரிக்க பள்ளிக்கூடத்தில் துப்பாக்கிச்சூடு

Posted by - October 20, 2016
சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள ஒரு பள்ளிக்கூட வளாகத்தில் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் மர்ம நபர்கள் புகுந்து துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் 4 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.
மேலும்

விமானி அறையில் திடீர் புகை

Posted by - October 20, 2016
ஜெர்மனியின் பிராங்பர்ட் நகரில் இருந்து 345 பயணிகளுடன் ஆர்லந்தோ நகரை நோக்கிச் சென்ற லுப்தான்சா நிறுவனத்துக்கு சொந்தமான ‘போயிங் ஜம்போ 747 ஜெட்’ ரக விமானத்தின் விமானி அறையில் இருந்து திடீரென புகை வெளியானதால் கனடா நாட்டில் அவசரமாக தரையிறக்க நேரிட்டது.
மேலும்

பாகிஸ்தான் முஸ்லீம் லீக் என் கட்சியின் தலைவராக நவாஸ் ஷெரீப் மீண்டும் தேர்வு

Posted by - October 20, 2016
பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) கட்சியின் தலைவராக நவாஸ் ஷெரீப் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மேலும்

மத்திய தரைக்கடலில் 5 அகதிகள் சடலம் கண்டெடுப்பு: 300 பேர் மீட்பு

Posted by - October 20, 2016
மத்திய தரைக்கடல் பகுதியில் இத்தாலி கடற்படையினர் மேற்கொண்ட மீட்பு நடவடிக்கையின் போது 5 அகதிகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. புலம் பெயர்ந்த 300 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
மேலும்

உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அதிகாரிகள்- தமிழக அரசு அவசர சட்டம்

Posted by - October 20, 2016
உறுப்பினர்களின் பதவி காலம் வருகிற 24-ந் தேதியுடன் முடிவடைவதால், உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அதிகாரிகளை நியமிக்க வகை செய்யும் அவசர சட்டத்தை தமிழக அரசு பிறப்பித்து உள்ளது.
மேலும்

ஜெயலலிதாவுக்கு சிங்கப்பூர் பிசியோதெரபி பெண் நிபுணர்கள் தொடர்ந்து சிகிச்சை

Posted by - October 20, 2016
சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்துவிட்டு நேற்று புறப்பட்ட லண்டன் டாக்டர் மீண்டும் இந்த வார இறுதியில் வர உள்ளார்.
மேலும்

நல்லாட்சியை 2020 வரை அசைக்கமுடியாது-மைத்திரிபால சிறிசேன

Posted by - October 20, 2016
இலங்கையில் உருவாக்கப்பட்டுள்ள நல்லாட்சி அரசாங்கத்தை 2020ஆம் ஆண்டுவரை அசைக்க முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சூளுரைத்துள்ளார்.மஹஒய நீர்வழங்கல் திட்டத்தை பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் இன்று கலந்துகொண்டு உரையாற்றும்போது ஜனாதிபதி இந்த கருத்தை வெளியிட்டார்.
மேலும்

தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி நீடிக்கிறது- திருநாவுக்கரசர்

Posted by - October 20, 2016
தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி நீடிப்பதாகவும், 3 தொகுதி இடைத்தேர்தலில் ஆதரவு அளிப்பது குறித்து இன்று முடிவு செய்யப்படும் என்றும் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர்…
மேலும்