பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு சொந்தமாக இருந்து, பின்னர் பிறிதொருவரால் கொள்வனவு செய்யப்பட்ட சொகுசுக் கார் ஒன்றை விடுவிக்கத் தேவையான ஆரம்பகட்ட நடவடிக்கைகளை மூன்று வாரங்களுக்குள் மேற்கொள்ளுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தலவாக்கலை பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் மணல் கொண்டு சென்ற லொறியுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தலவாக்கலை பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் இவர் நேற்று மாலை தலவாக்கலை வட்டகொட பிரதான வீதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த மணலை அனுமதி…
மொனார்க் ரெசிடன்ஸி மனைக்குடியிருப்பில்தான் தற்போதும் வசிக்கின்றோம். ஆனால் எனது மனைவி, குறித்த குடியிருப்பு தொடர்பில் யாருடன் ஒப்பந்தம் செய்தார்
யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை தொடர்பான பிரதான சந்தேகநபர் தப்பிச்செல்ல இராஜாங்க அமைச்சர் விஜயகலா உதவியதாக குற்றஞ்சாட்டப்படும் நிலையில், நீதிமன்றம் உத்தரவிட்டால் அவர் மீது விசாரணை நடத்தப்படுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினினால் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு நினைவுப் பரிசாக வழங்கப்பட்ட புராதன வாள் தேசிய மரபுரிமையாக்கப்பட்டு தேசிய நூதனசாலைக்கு ஒப்படைக்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று தேசிய நூதனசாலை கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.