எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனின் அழைப்பின் பேரில், வாழைச்சேனை காகித ஆலையைப் பார்வையிட இன்று (23) விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.
கொழும்பு குப்பைகளை புத்தளம் அருவக்காடு பிரதேசத்தில் கொட்டும் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று வெள்ளிக்கிழமை ஜூம்ஆத் தொழுகையின் பின்னர் புத்தளம் கரைத்தீவு பிரதேசத்தில் மூவின மக்களும் ஒன்று சேர்ந்து பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.
வடமாகாணத்தில் முதலமைச்சர் விக் னேஸ்வரனின் நடவடிக்கைகள் தொடர்பில் கவலையடைகின்றேன். யாழ்ப்பாணத்தில் படையினரின் பாதுகாப்பு நடவடிக்கையை முதலமைச்சர் குறைத்து மதிப்பிடக்கூடாது என மெளபிம மக்கள் கட்சியின் தலைவரும் தென் மாகாண ஆளுநருமான ஹேமகுமார நாணயக்கார தெரிவித்தார்.
தமிழர் தாயகப்பகுதியில் முதற்கட்டமாக நிர்மாணிக்கப்படவுள்ள 6ஆயிரம் பொருத்து வீட்டுத்திட்டத்திற்கு எதிராக மீளவும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.