தமிழ் அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்த சுதாகரை கருணை அடிப்படையில் விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி கையொப்பம் திரட்டும் பணிகள் கிளிநொச்சியில் இன்று (புதன்கிழமை) முன்னெடுக்கப்பட்டன.
சென்னை அடையாற்றில் உள்ள கிரவுன் பிளாசா ஓட்டல் சுமார் 24 கோடியே 88 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்து வரி கட்டவில்லை என மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டிவிட்டு சென்றனர்.
2 ஜி வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் விடுதலையை எதிர்த்து சி.பி.ஐ மேல்முறையீடு செய்துள்ளது. இது குறித்து டெல்லி ஐகோர்ட்டில் இன்று விசாரணை நடத்தப்படுகிறது.
முகநூல் பயன்படுத்தும் நபர்களின் தகவல்கள் திருடப்படுவது குறித்து முகநூல் அதிபர் மார்க் ஜூக்கர்பெர்க் விளக்கம் அளிக்க வேண்டும் என்று இங்கிலாந்து எம்.பி.க்கள் குழு உத்தர விட்டது.
ஈராக்கின் மோசூல் நகரில் 39 இந்தியர்கள் கடத்தி கொல்லப்பட்டதற்கு ஐக்கிய நாடுகள் சபை கண்டனத்தை தெரிவித்ததுடன், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் மேரிலாண்ட் பள்ளியில் நடந்த துப்பாக்கி சூட்டில் இரண்டு மாணவர்கள் காயமடைந்தனர் எனவும், துப்பாக்கி சூடு நடத்திய மாணவன் சுட்டு கொல்லப்பட்டான் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரஷிய அதிபராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள விளாடிமிர் புதினுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.