லண்டனில் தங்கள் குழந்தையை கவனித்து கொள்வதற்காக வந்த பெண் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்படுவதற்குமுன் எடுக்கப்பட்ட அதிர்ச்சி புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
கிளிநொச்சியை சேர்ந்த முன்னாள் போராளி ஒருவரை பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைக்கு அழைத்துள்ளனர். முன்னாள் போராளியும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினருமான திரு க.ஜெயக்குமார் என்பவரே இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளார்.
சிங்கள படைகளின் போர்முனைத் தளங்களில் அதிகம் உயரமில்லாத மிகமிக மெலிந்த ஓரல்முகமும் மினுங்கும் கண்ணும் கொண்ட சிற்றுருவம் ஒன்று நடுநிசியில் உலாவித் திரியும். கழுத்தில் ஒரு நீள வெள்ளைப் பல்லிருக்கும். ஒருமுறை கண்டுவிட்டு மறுவேளை பார்த்தால் மறைந்துவிடும். சுட்டால் சூடுபிடிக்காது. வருவதுபோல்…
சீரற்ற வானிலையின் காரணமாக, புத்தளம் மாவட்டத்தில் 6,255 குடும்பங்களைச் சேர்ந்த, 24,133 பேர் பாதிக்கப்பட்டுள்ளனரென, புத்தளம் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக மரணமடைந்த நபர்களுக்காக தலா 10 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நீர்ப்பாசனம், நீர் முகாமைத்துவ மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் பலித ரங்கே பண்டார கூறியுள்ளார்.
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் மே மாதம் 24, 25, 26, 27 மற்றும் ஜூன் மாதம் 02 ஆம் திகதிகளில் நடைபெற இருந்த அனைத்து பரீட்சைகளும் பிற்போடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பாடசாலைகளில் பணியாற்றும் கர்ப்பிணி ஆசிரியர்களுக்கு எளிமையான ஆடை ஒன்றை அணிந்து செல்வதற்கான புதிய நடைமுறை ஒன்றை மேற்கொள்ள உள்ளதாக கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.