ரம்ஜானை முன்னிட்டு போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ராணுவத்தினர் மற்றும் தலிபான் அமைப்பினர் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
டிரம்ப் அரசின் நடவடிக்கையால் ஏப்ரல் 19-ந் தேதி தொடங்கி, மே 31-ந் தேதி வரையிலான 6 வார காலத்தில் 1,995 குழந்தைகள் பெற்றோரிடம் இருந்து பிரித்து தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரத்தில் உலக பிரசித்தி பெற்ற ‘ஸ்கூல் ஆப் ஆர்ட்’ என்னும் கலைப்பள்ளியில் நிகழ்ந்த தீ விபத்தில் கட்டிடம் பெரும் சேதம் அடைந்தது.
ஐரோப்பிய நாடுகளில் குடியேறும் நோக்கத்தில் படகுகளில் வந்து நடுக்கடலில் 9 நாட்கள் தத்தளித்த 629 அகதிகளுக்கு அடைக்கலம் அளிக்க ஸ்பெயின் அரசு சம்மதம் தெரிவித்துள்ளது.
தங்க தமிழ்செல்வன் தவிர மற்ற எம்.எல்.ஏ.க்கள் சட்டப்படி போராடுவார்கள் என்று டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. நிரூபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஈரோடு மாவட்டம் கோபிக்கு…
தூத்துக்குடியில் மக்கள் நிம்மதியாக வாழ்வை தொடர கைது நடவடிக்கையை போலீசார் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு மனு கொடுத்தார்.
பேரறிவாளன் உள்பட 7 பேரின் விடுதலையை நிராகரித்த ஜனாதிபதி தனது முடிவை மறுபரிசீலனை செய்து அவர்களை விடுதலை செய்தால் நல்ல முடிவாக இருக்கும் என டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.
கருணாநிதியின் தந்திரத்தை உரிய நேரத்தில் பயன்படுத்துவோம். தி.மு.க. ஆட்சி வெகு விரைவில் உதயம் ஆகும் என்று சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார்.