வடக்கில் பாலியல் துஸ்பிரயோகித்திற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சிறுமி ரெஜினாவுக்கு நீதி கோரியும், அரசாங்கத்தை கண்டித்தும் இன்று காலை செங்கலடியில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது.
இஸ்ரேல் – பாலஸ்தீனம் நாடுகளுக்கு இடையிலான காஸா எல்லைப்பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பாலஸ்தீனத்தை சேர்ந்த இரண்டு பேர் உயிரிழந்தனர்.
கவுஹாத்தியில் நடைபெற்றுவரும் தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் 100 மீட்டர் ஓட்டத்தில் ஒடிசா வீராங்கனை டுட்டீ சந்த் 11.29 வினாடிகளில் இலக்கை எட்டி புதிய தேசிய சாதனை படைத்தார்.
இந்திய விக்கெட்கீப்பர் பேட்ஸ்மேனான டோனி, நேற்று நடந்த அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியின்போது வீரர்களின் கிட் பேக்கை சுமந்ததோடு, பேட்ஸ்மேன்களுக்கு தண்ணீர் கொண்டு வந்தார்.
நடிகர் சிவாஜி கணேசன் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளதற்கு நடிகர் பிரபு மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
கலந்தாய்வு நாளை தொடங்க உள்ள நிலையில் மருத்துவ கல்வி மாணவர் சேர்க்கை இணையதளம் 2 நாட்களாக முடங்கி இருக்கிறது. இதனால் தகவல்களை பார்த்து தெரிந்து கொள்ள முடியாமல் மாணவர்கள்-பெற்றோர் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர்.