சிரியாவில் 14 வீரர்களுடன் சென்ற ரஷ்ய போர் விமானம் மத்திய தரைக்கடல் பகுதியில் ரேடார் தொடர்பை இழந்ததால், அது சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 200 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்பட்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
பா.ஜ.க.விடம் கேள்வி கேட்க தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு எந்த தகுதியும் இல்லை திருச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேசினார்.
வெளியே இருப்பவர்களின் தூண்டுதலால் சிறை காவலர்கள், கைதிகளால் தனது உயிருக்கு ஆபத்து உள்ளதால் வேறு சிறைக்கு மாற்ற வேண்டும் என்று நீதிபதியிடம் நிர்மலாதேவி முறையிட்டார்.
இனி வரும் தேர்தல்களில் தனித்து போட்டியிட்டு வெற்றி பெறுவதற்கான வல்லமை அ.தி.மு.க.வுக்கு உண்டு என்று கரூரில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம், வெலிக்கடைச் சிறைச்சாலைக்கும் பரவியுள்ளதாக சிறைக் கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழு தெரிவித்துள்ளது.
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் சந்தேகநபர்கள், 48 மணித்தியாலங்களுக்குள் நீதிவான் முன்னிலையில் முன்னிறுத்தப்படுவதுடன், ஆகக்கூடியது 8 வாரங்கள் மட்டுமே இவர்களைத் தடுப்பில் வைத்திருக்கலாம் என்பதை வலியுறுத்தும், பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவுக்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.