சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் குறைந்த அளவே முன்பதிவில்லா டிக்கெட் கவுண்ட்டர்கள் செயல்படுகின்றன. இதனால் வரிசையில் நீண்ட நேரம் காத்திருக்கும் பயணிகள் கடும் அவதி அடைகின்றனர்.
இலங்கை, மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட தங்கம், செல்போன்கள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், பெண் உள்பட 2 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இஸ்ரோ தயாரித்து உள்ள ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3-டி2 ராக்கெட் 26 மணிநேர ‘கவுண்ட்டவுனை’ முடித்துக்கொண்டு இன்று (புதன்கிழமை) மாலை 5.08 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது.
ஈரான் நாட்டு தலைநகர் டெஹ்ரானில் 80-க்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் கூடும் மாபெரும் 3 நாள் கருத்தரங்கம் 24-ம் தேதி தொடங்குகிறது.
ரபேல் விமான பேரத்தில் ஊழல் இல்லை என பிரான்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.இந்திய விமானப்படையை பலப்படுத்துவதற்காக ரூ.58 ஆயிரம் கோடி மதிப்பிலான ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கு 2016-ம் ஆண்டு மத்திய பாரதீய ஜனதா கூட்டணி அரசு, பிரான்சுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட இந்திய வம்சாவளியை சேர்ந்த முதல் பெண் செனட் சபை எம்.பி., கமலா ஹாரீசுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
லண்டனை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிற ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் என்னும் சர்வதேச மன்னிப்பு அவை, சூ கியுக்கு அளிக்கப்பட்ட ‘மனசாட்சி விருது தூதர்’ என்னும் கவுரவத்தை பறித்து விட்டது.