ஞானசார தேரர் காவியை கழற்றிவிட்டு சண்டித்தனத்தைக் காட்டினால், அதற்கான பதிலைக் கொடுப்போம்” இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சவால் விடுத்தார்.
ஜனாதிபதி தேர்தலின் பிரதான வேட்பாளர்களாகக் கருதப்படுகின்ற கோத்தபாய மற்றும் சஜித் பிரேமதாச ஆகிய இருவருமே தமிழ்மக்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதிலான தமது நிலைப்பாடு குறித்து எழுத்தில் எந்த விதமான உத்தரவாதத்தையும் தர முடியாது என கூறியுள்ளனர்.
இன்று முற்பகல் 11 மணிக்கு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் இடம்பெறவுள்ள விஷேட ஊடகவியலாளர் சந்திப்பில் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அந்த கட்சியின் நிலைப்பாடு அறிவிக்கப்படும் என்று கட்சியின் பேச்சாளர் வீரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 5,60,491 ஆண் வாக்காளர்கள், 5,61,879 பெண் வாக்காளர்கள் மற்றும் 71 இதர வாக்காளர் (திருநங்கைகள்) ஆக மொத்தம் 11,22,441 வாக்காளர்கள் உள்ளனர்.ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெடரும்மான வீரராகவ ராவ் ஊரக மற்றும்…
மதுரையில் உருவாக்காமல், சிவகங்கையில் கீழடி குறித்த அருங்காட்சியகத்தை அமைக்க வேண்டும் என்று தமாகா இளைஞரணித் தலைவர் யுவராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார். சிவகங்கை மாவட்டம் கீழடியில் அகழ்வாராய்ச்சி நடைபெற்று வரும் இடங்களை தமாகா இளைஞரணித் தலைவர் யுவராஜா இன்று பார்வையிட்டார். அதைத் தொடர்ந்து…
நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கின் திடீர் திருப்பமாக இடைத்தரகர்களே மாணவர்களை கல்லூரியில் சேர்த்துவிட்டு பின்பு வேறு நபர்கள் மூலம் பணம் கேட்டு மிரட்டியது தற்போது தெரியவந்துள்ளது. எனவே மின்னஞ்சல் புகார் அனுப்பியவரை கைது செய்யும் முயற்சியில் சிபிசிஐடி.போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
எத்தனை மாணவ, மாணவியர் சத்துணவு சாப்பிடுகின்றனர் என்ற விவரத்தை தினமும் குறுஞ்செய்தியாக வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு அனுப்ப சத்துணவு ஊழியர் களுக்கு உத்தரவிடப்பட்டுள் ளது.