அமெரிக்க – சீனா வர்த்தகப் போர் சூழலை சாதகமாகப் பயன்படுத்தி, செயற்கை பஞ்சு கலந்த ஆயத்த ஆடை ஏற்றுமதியில் கவனம் செலுத் துவதன் மூலம் வேலைவாய்ப்புகளை அதிகரிக்க முடியும் என்று ஜவுளித் தொழில் துறையினர் கூறுயுள்ளனர்.
சிறப்பாக பணிபுரிந்த காவல் துறையினருக்கு வழங்கப்படும் இந்த ஆண்டுக்கான குடியரசுத் தலைவர் மற்றும் முதல்வர் பதக்கங்களை நாளை நடைபெறும் விழாவில் முதல்வர் பழனிசாமி வழங்குகிறார்.
பள்ளிக் கல்வித் துறை சார்பில் மழை நேரத்தில் தடகள போட்டிகள் நடத்தப்பட்டதால், பல மாணவர்கள் மைதானத்தில் வழுக்கி விழுந்து, அடுத்த சுற்று வாய்ப்பை இழந்ததாக புகார் எழுந்துள்ளது.
சட்டப் படிப்பை 2016-ல் முடித்த அனைவரும் சிவில் நீதிபதி பணிக் கான தேர்வுக்கு விண்ணப்பிக்கும் வகையில் டிஎன்பிஎஸ்சி இணைய தளத்தை 29-ம் தேதி வரை திறந்து வைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிறிலங்காவின் மூன்றாவது சர்வதேச விமான நிலையம், யாழ்ப்பாணம் பலாலி பகுதியில் கடந்த 17ம் திகதி சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்பட்டது.
பொதுத்துறை வங்கிகள் இணைப்பை கண்டித்து வங்கி ஊழியர்கள் இன்று (செவ்வாய்கிழமை) வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இந்த போராட்டத்தில் தமிழ்நாட்டில் 40 ஆயிரம் பேர் பங்கேற்க இருப்பதால் வங்கி பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.