ஜனாதிபதி தேர்தல் காலத்தில் அரச சொத்துக்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதை தடுக்கும் கண்காணிப்பு பிரிவு, நடவடிக்கைகளை மிக உண்ணிப்பாக மேற்கொண்டுவருவதாக, தேசிய தேர்தல் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்காக தற்காலிக அடையாள அட்டையை பெறுவதற்கான, விண்ணப்பங்கள் எதிர்வரும் 9 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக ஏற்படக்கூடிய அனர்த்தங்களை தடுப்பதற்காக தெரிவு செய்யப்பட்ட இடங்களில் கடற்படையினரை மீட்பு பணிகளில் ஈடுபடுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்காக தபால்மூலம் வாக்களிக்க தெரிவு செய்யப்பட்டுள்ள மத்திய நிலையங்களில் விசேட கண்காணிப்பு பணிகளை முன்னெடுக்க தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பத்தாதி கொல்லப்பட்ட பின்புலத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தொடர்பில் முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எச்.எம். பெளஸி மக்களை குழப்பும் வகையில் ஆற்றியதாக கூறப்படும் உரை தொடர்பில் விஷேட விசாரணைகளை கிராண்பாஸ் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
வவுனியா பூந்தோட்டம் அண்ணாநகர் ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவிலுக்குச் சென்ற பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை அறுத்த இரு சந்தேக நபர்களை பொலிசார் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.