கிளிநொச்சி – முழங்காவில் பகுதியில், போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து,முழங்காவில் மகா வித்தியாலய மாணவர்கள், இன்று (01), விழிப்புணர்வு பேரணியொன்றை முன்னெடுத்ததுடன், கவனயீர்ப்புப் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
சீனாவிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ள சினோபார்ம் தடுப்பூசி முதலில் கொழும்பு, ஹம்பாந்தோட்டை, கண்டி, புத்தளம் ஆகிய மாவட்டங்களிலுள்ள சீனர்களுக்கே முதலில் வழங்கப்படுமென்று பிரதான தொற்று நோய் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது.
முள்ளிவாய்க்காலில் தமிழர்களுக்கு எதிராக இலங்கை இராணுவத்தினரால் இழைக்கப்பட்ட அநீதிகளை சர்வதேச சமூகத்துக்குக் கொண்டு சென்றவர் இராயப்பு ஜோசப் ஆண்டகை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் அவர்கள் தெரிவித்துள்ளார்.