பொகவந்தலாவ, கிவ் தோட்டத்தில் ஒரே குடும்பத்தைச சேர்ந்த 8 பேருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக பொகவந்தலாவ சுகாதார வைத்திய அதிகாரி ஜெய்கணேஷ் தெரிவித்துள்ளார்.
எம்மைவிட மோசமாக கொரோனா பேராபத்தில் விழுந்து விட்ட அப்பாவி இந்திய மக்களுக்காக, எல்லா பேதங்களையும் தள்ளி வைத்து விட்டு, மனிதத்தின் பெயரால் பிரார்த்தனை செய்யுங்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
உ.பி., மாநிலம் ஆக்ராவில் கொரோனா பாதித்த தன் கணவனை காப்பாற்ற, அவரது மனைவி வாய்வழியாக மூச்சுக்காற்றை ஊதி ஒக்சிஜன் அளித்த போதும், கணவரின் உயிரை மனைவியால் காப்பாற்ற முடியவில்லை. இது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் மூடுவதற்கு அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொவிட்-19 வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், அனைத்துபாடசாலைகளையும் எதிர்வரும் 30 ஆம் திகதிவரை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட, பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியூதீன் மற்றும் அவருடைய சகோதர்களில் ஒருவரான ரியாஜ் பதியூதீன் ஆகிய இருவரையும் 90 நாள்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்துவதற்கான அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.